பிக்பாஸில் தனது சகோதரன் குறித்து நெகிழ்ந்து பேசிய பிரித்வி… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 12-வது வாரம் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த வாரம் பிக்பாஸில் ஃபேமிலி வாரம் என்பதால் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்களில் ஒருவர் பிரித்விநாத். இவர் ஜெர்மனியில் படிக்கும் போதே பார்ட் டைமாக வேலை செய்துகொண்டே படித்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராமில் தனது வேலை குறித்தும் அங்கு நடைபெறும் சம்பவங்கள் மற்றும் படிக்கும் இடத்தில் நடக்கும் நிகழ்வுகள் நண்பர்களுடன் இருக்கும் போதும் மிகவும் கலகலப்பான வீடியோவை வெளியிடுவார். அந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மிகவும் கலகலப்பான வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கும் பிரித்விநாத் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலமிறங்கினார். இன்ஸ்டாகிராம் வீடியோவில் கலகலப்பாக பேசிய பிரித்விநாத் பிக்பாஸ் வீட்டிற்குள் கலகலப்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் 12 வாரங்களை கடந்து வந்துள்ள பிரித்விநாத் இன்னும் வெளியேறவில்லையா என்ற கேள்வியும் மக்களிடையே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 12-வது வாரம் ஃபேமிலி வாரமாக உள்ளது. இதன் காரணமாக வீட்டிலுள்ள 8 போட்டியாளர்களின் குடும்பத்தினரும் ஒவ்வொரு குடும்பமாக தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.




பிக்பாஸில் தனது சகோதரன் குறித்து நெகிழ்ந்து பேசிய பிரித்வி:
அந்த வகையில் நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்கள் வினோத் பாபு மற்றும் லக்ஷ்மி பிரியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்த நிலையில் இன்றைய நாளிற்கான முதல் புரோமோ விடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இன்று பிரித்விநாத் குடும்பத்தினர் முதலாவதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். அப்போது பிரித்விநாத்தின் இரட்டை சகோதரர் வீடியோ மூலமாக பிரித்விநாத்திடம் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர் தனது வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை பிரித்விநாத் வெளிப்படையாக பேசுகிறார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் ஆர்யவின் ஹெலோ காதல் படத்தின் ட்ரெய்லர்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Day80 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/NcV7Eje5Hp
— Vijay Television (@vijaytelevision) November 25, 2026
Also Read… சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது காத்து வீசும் தேசம் வீடியோ பாடல்!