Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
AR Rahman

AR Rahman

 

இசை ரசிகர்களால் இசைப் புயல் என்று அன்புடன் அழைக்கப்படுவபர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் முன்பு பல இசையமைப்பாளர்களின் இசைக்குழுவில் வேலை செய்துவிட்டு பின்பு 1992-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளியான முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இசையமைத்து வருகிறார். தனது இசைக்கு பல விருதுகளை குவித்துள்ள இசையமைப்பாளர் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இரண்டு ஆஸ்கர் விருதைப் பெற்று ஆஸ்கர் நாயகனாகவும் வலம் வருகிறார். பல மொழிகளில் பணியாற்றி வந்தாலும் தொடந்து தனது தமிழ் மீதான பற்றை வெளிப்படையாக கூறி வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

Read More

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உண்மையானா ஹீரோ – ஸ்ருதி ஹாசன் புகழாரம்

Actress Shruti Haasan: தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் நடிகை மட்டும் இன்றி பாடகியாகவும் உள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி.. காண முடியாதவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு

AR Rahman Show Controversy : கடந்த 2023 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை காண முடியவில்லை என ரசிகர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் டிக்கெட் வாங்கியும் பார்க்க முடியாதவர்களுக்கு இழப்பீடாக ரூ.50,000 வழங்க உத்தரவிட வேண்டும் என ஏசிடிசி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும் – செல்வராகவன் புகழாரம்

Director Selvaraghavan talks about AR Rahman: கோலிவுட் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவில் தான் பார்க்கும் படங்கள் சிறப்பாக இருக்கிறது என்றால் அதனைப் பாராட்ட தவறியதே இல்லை இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் ஒன்றை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

தக் லைஃப் படத்திலிருந்து வெளியானது சுகர் பேபி பாடலின் லிரிக்கள் வீடியோ!

Sugar Baby Song Lyrical Video | இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திலிருந்து சுகர் பேபி பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இரண்டாவது பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

அப்படி கூப்டாதீங்க எனக்கு புடிக்கல… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

AR Rahman: இசை ரசிகர்களால் இசைப்புயல் என்று அழைப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் ரசிகர்கள் தன்னை பெரிய பாய் என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அப்படி அழைக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இனி நீயா நானாணு பாக்கலாம்… கமல் ஹாசன் – சிலம்பரசனின் ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

Thug Life Movie Trailer : தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்களின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த அதிரடி ஆக்ஷ்ன் படமானது கமல் ஹாசன், மணிரத்னம் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் படக்குழு, தக் லைஃப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

‘அடங்காத அசுரன்தான்’.. மேடையில் பாடி அசத்திய தனுஷ்- ஏ.ஆர். ரஹ்மான்.. வைரலாகும் வீடியோ!

Dhanush And AR Rahman Concert : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், பாடகர் எனப் பல திறமையைக் கொண்டிருப்பவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் ராயன் படத்தில் வெளியான பாடலை இணைந்து பாடி அசத்தியுள்ளார். அது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் பட காப்புரிமை பிரச்னை – ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு

Copyright Dispute: பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீரா பாடல் தனது தந்தையின் சிவ ஸ்துதி என்ற பாடலின் சாயலில் இருப்பதாக ஃபியாஸ் வசிஃபுதீன் தாகர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ. 2 கோடியை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடவுள் கூட விமர்சனத்திற்கு ஆளாகிறார்… மனைவியை பிரிந்து வாழ்வது குறித்து வரும் விமர்சனத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பேச்சு

AR Rahman about Separation With Saira Banu: மனைவி சாய்ரா பானுவிடமிருந்து பிரிந்ததைச் சுற்றியுள்ள பொதுமக்கள் விமர்சனம் குறித்து பல மாதமாக மௌனத்தில் இருந்த இசையமைப்பாளர்  ஏ.ஆர். ரகுமான் தற்போது தனது மௌனத்தைக் கலைத்து பதிலளித்துள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகின்றது.

நான் ஒரு இரவு ஆந்தை… பகலில் வேலை செய்வது போர் – ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்

Music Director AR Rahman: இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவர் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். இரவு முழுவதும் தூங்கி பகலில் வேலை செய்வது "சலிப்பூட்டுவதாக" இருப்பதாகவும், இரவு முழுவதும் வேலை செய்வதையே தான் விரும்புவதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்ரமன் – ரஹ்மான் இணைந்த ஒரே படம் எது தெரியுமா?

AR Rahman: சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி வந்த விக்ரமன், பெரும்புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம் என சிறிய முதலீட்டில் உள்ள படங்களை இயக்கிவந்தார் விக்ரமன். இந்த நிலையில் விஜய்யுடன் இணைந்த பூவே உனக்காக படம் இருவரது திரையுலக வாழ்க்கையிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஒரு படம் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நடிகர் விஜய்யை கொண்டு சேர்த்தது.