மூன்வாக் படத்திற்காக ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த விசயம் – வைரலாகும் வீடியோ
AR Rahman Moonwalk Movie: பான் இந்திய அளவில் பிரப இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் எந்த மொழியாக இருந்தாலும் பான் இந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் லெஜண்டுகளாக இருந்த பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ் சினிமாவில் வெளியான ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் குமார், விக்ரம், ரஜினிகாந்த், கமல் ஹாசன், நாகர்ஜுனா, சூர்யா, விஜய், சிலம்பரசன், தனுஷ் மற்றும் துல்கர் சல்மான் என பலரது படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இவரது இசையில் வெளியான படங்களின் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிரபு தேவா நடித்துள்ள மூன் வாக் என்ற படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் மனோஜ் எழுதி இயக்கி உள்ள நிலையில் பிரபு தேவா உடன் இணைந்து படத்தில் நடிகர்கள் யோகி பாபு, அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், அஜு வர்கீஸ், சிங்கம்புலி, தீபா சங்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் 2026-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மூன்வாக் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த விசயம்:
இந்த நிலையில் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த மூன்வாக் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் படத்தில் உள்ள 5 பாடல்களையும் பாடியுள்ளார். இதுவரை இவர் இசையமைக்கும் படங்களில் ஏதேனும் ஒரு பாடலை மட்டுமே பாடுவார். ஆனால் முதன்முறையாக இந்த மூன்வாக் படத்தில் தான் உள்ள 5 பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து படத்தின் இயக்குநர் பேசியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் காவலன் படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
இணையத்தில் கவனம் பெறும் இயக்குநர் மனோஜின் பேச்சு:
#ARRahman for the First time🔥🔥
“#MoonWalk has totally 5 Songs. For the first time, all the 5 songs have been sung by ARRahman himsel🎙️f. ARR initially rejected❌. I kept asking ARR sir for 4 months, as this film is about happiness❣️”
– Dir Manoj pic.twitter.com/2pGq6BcW5p— AmuthaBharathi (@CinemaWithAB) December 3, 2025
Also Read… ஓடிடியில் வெளியாகும் மாஸ்க் படம்… எங்கு எப்போது பார்க்கலாம்?