ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் காவலன் படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Kaavalan Movie Re-release Update: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் காவலன். இந்தப் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 14-ம் தேதி ஜனவரி மாதம் 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் காவலன். இந்தப் படத்தை இயக்குநர் சித்திக் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் ஆக்ஷன் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அசின் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் மித்ரா குரியன், ராஜ்கிரண், ரோஜா, வடிவேலு, லிவிங்ஸ்டன், மதன் பாப், மகாதேவன், கிருஷ்ண குமார், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, யுவஸ்ரீ, டெல்லி கணேஷ், நீபா, கின்னஸ் பக்ரு, ஷர்மிலி, வையாபுரி, சதீஷ் கிருஷ்ணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சி. ரொமேஷ் பாபு தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ரீ ரிலீஸாகும் விஜயின் காவலன் படம்:
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான கில்லி, சச்சின், குஷி ஆகிய படங்கள் மீண்டும் ரீ ரிலீஸாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜயின் நடிப்பில் முன்னதாக வெளியான காவன் படம் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Also Read… காந்தாரா படம் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கோரிய நடிகர் ரன்வீர் சிங்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Excited to reveal the next re-release hitting theatres on December 5 – it’s our Thalapathy’s Kaavalan 🧨
Bookings soon ! #Kaavalan #ThalapathyVijay @actorvijay pic.twitter.com/j1OTom403J
— Vishnu Kamal (@kamala_cinemas) December 1, 2025
Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் ரீ ரிலீஸாகும் எஜமான் படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்