Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காந்தாரா படம் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கோரிய நடிகர் ரன்வீர் சிங் 

Actor Ranveer Singh: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரன்வீர் சிங். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் காந்தாரா படம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

காந்தாரா படம் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கோரிய நடிகர் ரன்வீர் சிங் 
நடிகர் ரன்வீர் சிங்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Dec 2025 17:58 PM IST

இந்தி சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரன்வீர் சிங். இவரது நடிப்பில் பாலிவுட் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து பான் இந்திய அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் முன்னதாக வெளியான பாஜிரோ மஸ்தானி, பத்மாவத், கல்லிபாய், 83, சர்கஸ் என பலப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் ஸ்பை ஆக்‌ஷர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள துரந்தர் என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படம் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் முன்னதாக கோவாவில் நடைப்பெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் ரன்வீர் சிங் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 படம் குறித்தும் ரிஷப் ஷெட்டியின் நடிப்பையும் குறித்து பேசினார். அதனை அவர் பேசிய விதத்தைப் பார்த்தவர்கள் காந்தாராவை கிண்டல் செய்கிறார் ரன்வீர் சிங் என்று அவருக்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பியது.

காந்தாரா சர்ச்சை… மன்னிப்பு கோரிய ரன்வீர் சிங்

இந்த நிலையில் நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, படத்தில் ரிஷபின் அற்புதமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நடிகருக்கு நடிகர், அந்த குறிப்பிட்ட காட்சியை அவர் செய்த விதத்தில் நடிக்க எவ்வளவு தேவைப்படும் என்பதை நான் அறிவேன், அதற்காக அவருக்கு அதிக அளவில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையையும் நான் எப்போதும் ஆழமாக மதிக்கிறேன். யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தியிருந்தால், நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் இந்த பிரபலங்கள் எல்லாம் பங்கேற்பார்களா? வைரலாகும் தகவல்

ரன்வீர் சிங் வெளியிட்ட இன்ஸ்டாமிராம் ஸ்டோரி:

Ranveer Sing

Also Read… ஜமீன்தார் வீடாக மாறிய பிக்பாஸ் இல்லம்… இந்த வார டாஸ்க் இதுதான் – வைரலாகும் வீடியோ