ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸான ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு
Dhurandhar Official Trailer | பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நிலையில் அடுத்ததாக தற்போது துரந்தர் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பாலிவுட் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பாண்ட் பாஜா பாரத் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் ரன்வீர் சிங். இவர் அறிமுகம் ஆன முதல் படமே இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் இந்தி சினிமாவில் உருவானது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தி சினிமாவில் மட்டுமே நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து வந்தாலும் இவரது திறமையான நடிப்பின் காரணமாக தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் இவரக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் நடிப்பில் இந்தி சினிமாவில் வெளியாகும் படங்கள் மற்ற மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதன்படி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் முன்னதாக வெளியான பாம்பே டாக்கீஸ், கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா, தில் தடக்னே தோ, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், கல்லி பாய், 83, ஜெயேஷ்பாய் ஜோர்தார், சர்க்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி ஆகிய படங்கள் இந்தி சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் துரந்தர்.




துரந்தர் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு:
நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கும் இந்த துரந்தர் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஆதித்ய தார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் உடன் இணைந்து நடிகர்கள் சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், ராகேஷ் பேடி, கீத் செக்வேரா, மானவ் கோஹில், நவீன் கௌஷிக், டேனிஷ் பாண்டோர், மஷ்ஹூர் அம்ரோஹி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read… அப்பா – மகன் காம்போவில் உருவான முதல் பாடல்… கொம்புசீவி படத்தில் இணைந்து பாடிய இளையராஜா, யுவன்!
நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
This time……it’s personal.
In Cinemas 5th December.#AkshayeKhanna @duttsanjay @ActorMadhavan @rampalarjun #SaraArjun @bolbedibol @AdityaDharFilms #JyotiDeshpande @LokeshDharB62 @jiostudios @B62Studios @saregamaglobal pic.twitter.com/7F0TJQQgsu
— Ranveer Singh (@RanveerOfficial) November 18, 2025
Also Read… நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள டெல்லி க்ரைம் சீசன் 3 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ