Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அப்பா – மகன் காம்போவில் உருவான முதல் பாடல்… கொம்புசீவி படத்தில் இணைந்து பாடிய இளையராஜா, யுவன்!

Kombuseevi Movie Update : தமிழ் சினிமாவின் இசைஞானி என அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருவரும் முதன்முறையாக இணைந்து விஜயகாந்தின் மகன் ஷண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துள்ள கொம்புசீவி படத்திற்காக பாடியுள்ளனர்.

அப்பா – மகன் காம்போவில் உருவான முதல் பாடல்… கொம்புசீவி படத்தில் இணைந்து பாடிய இளையராஜா, யுவன்!
கொம்புசீவி படக்குழுவினர் உடன் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2025 20:00 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவே தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பாடல்கள் ரசிகர்களிடையே தற்போது வரை வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல ஆயிரக்கனக்கான பாடல்களை இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். இதில் மூத்த மகன் கார்த்திக் ராஜாவும் இசையமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையான பவதாரணி பாடகியாக பலப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடந்த்தக்கது. மேலும் இளையராஜாவின் மூன்றாவது மகன் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் 90ஸ் கிட்ஸ்களின் ஆதர்சன இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்” என்ற பழமொழிக்கு ஏற்ப அவரது தந்தை இளையராஜா எப்படி தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டாரோ அதே போல அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தனது இசையால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான ஷண்முகப் பாண்டியனின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் கொம்பு சீவி படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கொம்புசீவி படத்தில் இணைந்து பாடிய இளையராஜா, யுவன்:

யுவன் சங்கர் ராஜா பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் நிலையில் இவரது இசையில் இசையமைப்பாளர் இளையராஜா பலப் பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து இதுவரைப் பாடியதில்லை. இந்த நிலையில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் கொம்புசீவி படத்தில் தான் முதன்முறையாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் ஷண்முக பாண்டியனுடன் இணைந்து நடிகர்கள் சரத்குமார், தர்ணிகா, காளி வெங்கட், கல்கி ராஜா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Also Read… தோ கிலோமீட்டர்… தோ கிலோமீட்டர்… 8 ஆண்டுகளை நிறைவு செய்தது தீரன் அதிகாரம் ஒன்று படம்!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் போட்டியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் இவர்கள்தான் – வைரலாகும் லிஸ்ட்