Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mahesh Babu: எனது கனவு படம்… வாரணாசி படத்தால் இந்தியாவே பெருமைப்படும்- மகேஷ் பாபு பேச்சு!

Mahesh Baba About Varasasi Movie: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் மகேஷ் பாபு. இவரின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக , மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் வாரணாசி. இந்த படத்தின் டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு, இப்படத்தால் இந்தியாவே பெருமைப்படும் என தெரிவித்துள்ளார்.

Mahesh Babu: எனது கனவு படம்… வாரணாசி படத்தால் இந்தியாவே பெருமைப்படும்- மகேஷ் பாபு பேச்சு!
மகேஷ் பாபுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Nov 2025 17:07 PM IST

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் மகேஷ் பாபு (Mahesh Baba). இவர் தெலுங்கு பல ஹிட் படங்களை கொடுத்து தற்போதுவரை வெற்றிநாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக “குண்டூர் காரம்” (Guntur Kaaram) என்ற திரைப்படமானது வெளியானது. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படத்தை அடுத்ததாக இவர், எஸ்.எஸ்.ராஜமௌலியின் (S.S. Rajamouli) திரைப்படத்தில் கதாநாயகனாக இணைந்தார். இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்த படமானது ஆரம்பத்தில் “எஸ்.எஸ்.எம்.பி.29” (SSMB29) என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் நேற்று 2025 நவம்பர் 15ம் தேதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அதில் இந்த படத்திற்கு “வாரணாசி” (Varanasi) என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன், பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் இணைந்து நடிக்கவுள்ளனர். இவர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் வாரணாசி பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மகேஷ் பாபு, “இப்படத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உங்களுக்கான முடிவை மற்றவர்களை எடுக்கவைக்காதீர்கள்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!

வாரணாசி பாட நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ் பாபு பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மகேஷ் பாபு, “இந்த வாரணாசி படம் எனது கனவு திரைப்படம். வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இதுபோன்ற படத்தை உருவாக்கமுடியும். இப்படத்தின் மூலம் நான் எல்லோரையும் பெருமைப்படுத்துவேன். அதிலும் மிக முக்கியமாக எனது இயக்குநர் எஸ்எஸ்.ராஜமௌலியை பெருமைப்படுத்துவேன்.

இதையும் படிங்க: கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதைக்களம் இதுதான்… அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

மேலும் இந்த வாரணாசி படத்தின் ரிலீசிற்கு பிறகு, இந்த இந்தியா முழுவதும் எங்களை பற்றி பெருமைப்படும். இது வெறும் தலைப்பு மட்டும்தான், இன்னும் இப்படத்தின் நிறைய விஷயங்கள் இருக்கிறது” என்று அந்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

வாரணாசி படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்து நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

வாரணாசி பட டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகியது என்றே கூறலாம். இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் ஹாலிவுட் படம் போல மிக பிரம்மாண்டமாகவே உருவாகியிருக்கிறது. இந்த படமானது ஒரு டைம் டிராவல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகிவருவதாக தெரிகிறது. இதில் ராமாயணம், மகாபாரதம் போன்ற பலரு நிகழ்வுகளும் உள்ளடங்கி இருக்குமென்றும் கூறப்படுகிறது.