Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Varanasi : ருத்ராவாக மகேஷ்பாபு.. ராஜமவுலியின் ‘வாரணாசி’ பட டீசர்!

Varanasi Title Teaser: தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்து வருபவர் மகேஷ் பாபு. இவர் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் வாரணாசி. இந்த படம் ஆரம்பத்தில் எஸ்எஸ்எம்பி29 என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது

Varanasi : ருத்ராவாக மகேஷ்பாபு.. ராஜமவுலியின் ‘வாரணாசி’ பட டீசர்!
வாரணாசி பட டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Nov 2025 11:01 AM IST

பான் இந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் எஸ்.எஸ்.ராஜமௌலி (S.S. Rajamouli). தெலுங்கு சினிமாவில் மிக பிரம்மாண்ட பட்ஜெட் படங்களான நான் ஈ, பாகுபாலி (Baahubali) படத்தொகுப்பு என மிக பிரம்மாண்ட படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மகேஷ் பாபு நடித்துவருகிறார். இந்த படமானது ஆரம்பத்தில் “எஸ்.எஸ்.எம்.பி29” (SSMB29) என அழைக்கப்பட்டுவந்த நிலையில், அதை தொடர்ந்து இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் மகேஷ் பாபு (Mahesh Babu) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) நடித்துவருகிறார். இந்த படத்தில் முக்கிய வில்லனாக மலையாள பிரபலம் பிரித்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran) நடித்துவருகிறார். அந்த வகையில் இந்த படத்திற்கு படக்குழு “வாரணாசி” (Varanasi) என்று டைட்டில் வைத்துள்ளது.

இந்த படமானது ஜங்கிள் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று 2025 நவம்பர் 15ம் தேதி இரவில் வெளியானது. இந்த டைட்டில் டீசரில் மகேஷ் பாபு காளையின் மீது அமர்ந்தவருவது போன்ற காட்சிகள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: காந்தா படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் நடித்துவரும் படம் இதுதான்.. அவரே சொன்ன விஷயம்!

எஸ்.எஸ்.ராஜமோலி மற்றும் மகேஷ் பாபுவின் வாரணாசி பட டைட்டில் டீசர் பதிவு :

வாரணாசி திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த வாரணாசி படத்தில் நடிகர் மகேஷ் பாபு, “ருத்ரா” என்ற வேடத்திலும் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா “மந்தாகினி” என்ற வேடத்திலும் நடித்துவருகின்றனர். நடிகை பிரியங்கா சோப்ரா சில ஆண்டுகளுக்கு பின் இந்திய சினிமாவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது முற்றிலும் எதிர்காலத்தில் நாடு எப்படி இருக்கும் மற்றும் ஒரு ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்துடன் இப்படமானது உருவாகிவருகிறது.

இதையும் படிங்க: சுந்தர் சி-யின் கருத்து… எனது நட்சத்திரம் விரும்பும் கதையை எடுப்பதுதான் எனக்கு நன்மை – கமல்ஹாசன் பேச்சு!

இப்படமானது சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படும் நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துவருகிறது. மேலும் இப்படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் வரும் 2027ம் ஆண்டில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் இந்த படத்த்தின் ஷூட்டிங் 1 வருடத்திற்கும் மேல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.