Kamal Haasan: சுந்தர் சி-யின் கருத்து… எனது நட்சத்திரம் விரும்பும் கதையை எடுப்பதுதான் எனக்கு நன்மை – கமல்ஹாசன் பேச்சு!
Kamal Haasan Responds to Sundar C Comment: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், அரசியல்வாதி மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் கமல்ஹாசன். இவர் சுந்தர் சி இயக்கத்தில், ரஜினிகாந்தின் தலைவர்173 படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த கருத்திற்கு பதிலை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்துவருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). தனது சிறுவயது முதலே சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் நடிக்க தொடங்கிய இவர், தற்போது வரையிலும் பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தக் லைஃப் (Thug Life). இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்க, கமல்ஹாசன் கதையை எழுதியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக புதிய படங்ககள் இவர் ஒப்பந்தமாகிவருகிறார். மேலும் இவர் மாநிலங்களவை எம்.பியாகவும் பதவியேற்ற நிலையில், அரசியல் காரியங்களாக பிசியாக இருந்துவருகிறார். சமீபத்தில் இவரின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) தலைவர்173 (Thalaivar173) திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான அறிவிப்பு பதிவுகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்துவந்தது. இந்நிலையில் சமீபத்தில், இப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பான ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சுந்தர் சி-யின் கருத்திற்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.




இதையும் படிங்க: காதல் என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?.. ரசிகரின் கேள்விக்கு பதிலை கொடுத்த தனுஷ்!
இயக்குநர் சுந்தர் சி- யின் தலைவர்173 பட விலகல் குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன் :
சமீபத்தில் விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், அதில், “சுந்தர் சி-யுடன் மீண்டும் இணைகிறது என்பது, அவர் வெளியிட்ட அறிக்கையிலே இருக்கிறது. அதுதான் அவருடைய கருத்து. இதை குறித்து என்னுடைய கருத்து என்னெவென்றால், நான் ஒரு முதலீட்டாளர், எனது நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அதைத்தானே பண்ணிக்கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்திற்கு பிடிக்கும் வரை தலைவர்173 படத்திற்காக கதையை தேடிக்கொண்டே இருப்போம்.
இதையும் படிங்க: ரஜினியின் தலைவர்173 படத்தை சுந்தர் சி கைவிட என்ன காரணம்? ரசிகர்கள் கேள்விக்கு பதில் இதோ!
மேலும் புது இயக்குநர்களுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது, நாங்கள் எதிர்பார்ப்பது படத்தின் கதை நன்றாக இருக்கவேண்டும் என்பதுதான். மேலும் நானும், ரஜினிகாந்த் சாரும் நடிக்கும் படத்திற்கும் கதை தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போது ரஜினிகாந்தின் தலைவர்173 படத்திற்காக கதையை தேடிக்கொண்டிருக்கிறோம்: என கூறினார். மேலும் அதில் செய்தியாளர் ஒருவர் எந்த மாதிரியான கதையை எதிர்பார்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.
தலைவர்173 படத்தில் சுந்தர் சியின் விலகல் குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ பதிவு :
#KamalHaasan Recent
– I’m an investor, and I need to choose a story my star will love…✨
– We’ll keep searching until we find the perfect one…🎬
– We’re also on the lookout for another story for us to act in together…🤝#Rajinikanth | #Thalaivar173pic.twitter.com/VkRggRKHV9— Movie Tamil (@_MovieTamil) November 15, 2025
தற்போது தயாரிப்பாளராக கமல்ஹாசன், தலைவர்173 படத்திற்காக கதை தேடிவரும் நிலையில், விரைவில் இந்த படத்தின் இயக்குநர் யார்?, என்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமானது 2027ம் ணட பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என கூற்பட்டநிலையில், தள்ளிப்போகலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.