Tere Ishq Mein: அதிரடி காதல் கதையில்.. தனுஷ்- கிருத்தி சனோனின் ‘தேரே இஷ்க் மே’ பட ட்ரெய்லர் இதோ!
Tere Ishq Mein Trailer: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குநர் , எழுத்தாளர் மற்றும் பாடகர் என பல்வேறு பணிகளை தரமாக செய்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் இந்தி மொழியில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவந்த படம்தான் தேரே இஷ்க் மே. வித்தியாசமான காதல் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் மொழியை தொடர்ந்து இந்தி, தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களிலும் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் இதுவரை இந்தியில் மட்டும் 3 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த படங்களைத் தொடந்து 4வது நடித்திருக்கும் படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படத்தை தனுஷின் ராஞ்சனா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல் ராய்தான் (Anand L Rai) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தேரே இஷ்க் மே படத்தின் மூலம் 3வது முறையாக தனுஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமானது இந்தி மொழியை அடிப்படையாக கொண்டு உருவானாலும், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாக காத்திருக்கிறது.
இந்த படத்தில் தனுஷ் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் (Kriti Sanon) நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியாகின்ற நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ‘அஜித் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்’- ஓபனாக பேசிய துல்கர் சல்மான்!
தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து வெளியான பதிவு :
#TereIshkMein official trailer is out now-
Stars : Dhanush, Kriti Sanom
Music : Isai Puyal AR Rahman
Directed by: Aanand L Rai pic.twitter.com/4VcwSn9IXq— MOHIT_R.C (@Mohit_RC_91) November 14, 2025
இந்த தேரே இஷ்க் மே திரைப்படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அதிரடி கல்லூரி மாணவனாகவும் மற்றும் விமானப்படை ராணுவ வீரனாகவும் தனுஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுவரை பார்த்திடாத அளவிற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ரஜினியின் தலைவர்173 படத்தை சுந்தர் சி கைவிட என்ன காரணம்? ரசிகர்கள் கேள்விக்கு பதில் இதோ!
இந்த படமானது வரும் 2025 வநவம்பர் 28ம் தேதியில் வெளியாகவும் நிலையில், நிச்சயமாக ராஞ்சனா திரைப்படத்தை போல ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ட்ரெய்லர் ரிலீஸை தொடர்ந்து இப்படத்தின் டிக்கெட் புக்கிங் மற்றும் சென்சார் சான்றிதழ் போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.