Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhruv Vikram: தனது பெயரில் எக்ஸ் பக்கத்தில் போலி கணக்குகள்.. ரசிகர்களை எச்சரித்த துருவ் விக்ரம்!

Dhruv Vikram Warns About Fake Accounts: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் துருவ் விக்ரம். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் பைசன் படமானது வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இந்நிலையில் சமீப காலமாக இவர் தொடர்பான டுவிட்டர் பக்கத்தில் போலி கணக்குகளால் ஏமாற்றப்படும் நிலையில், அது குறித்து எச்சரித்து பதிவு வெளியாகியுள்ளது.

Dhruv Vikram: தனது பெயரில் எக்ஸ் பக்கத்தில் போலி கணக்குகள்.. ரசிகர்களை எச்சரித்த துருவ் விக்ரம்!
துருவ் விக்ரம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Nov 2025 19:33 PM IST

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நாடிகராக இருந்துவருபவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரை தொடர்ந்து இவர் மகன் துருவ் விக்ரம் (Dhruv Vikram), சினிமாவில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 4 படங்கள் மட்டும் வெளியாகியிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பிரபலம் அதிகம். தெலுங்கு ரீமேக் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகி மகான் (Mahan), வர்மா (varmaa)போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பை கொடுக்க, இப்படங்களை அடுத்ததாக ஒட்டுமொத்த இந்தியாவே பாராட்டும் விதத்தில் அமைந்திருந்த படம்தான் பைசன் (Bison). இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்க, பா.ரஞ்சித் (Pa. Ranjith) தயாரித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தை அடுத்ததாக துருவ் விக்ரமிற்கு ரசிகர்கள் எண்ணிக்கை கூடியுள்ளனர். இந்நிலையில் இவருக்கு எக்ஸ் பக்கத்தில் எந்தவித கணக்குகளும் இல்லை என்ற நிலையில், போலி கணக்குகள் மூலம் ரசிகர்களை ஏமாற்றிவருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக துருவ் விக்ரமின் மேலாளர் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – நடிகர் அஜித் குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் சூரி

துருவ் விக்ரம் எக்ஸ் போலி கணக்கு குறித்து எச்சரித்து வெளியான பதிவு :

இந்த பதிவில் நடிகர் துருவ் விக்ரம் அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே கணக்கு வைத்திருக்கிறார். மற்றபடி டுவிட்டர், ஸ்னாப்சாட், பேஸ்புக் மற்றும் வேறு எந்த சமூக ஊடகங்களிலும் அவர் இல்லை என்பது உறுதி. ஆனால் இதை சிலர் தவறாக பயன்படுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: எனக்கு நடிக்கும் எண்ணமே போயிடுச்சி.. ஆனால் தனுஷ் என்னை தொடர்ந்து தயார்படுத்தினார் – ஆண்ட்ரியா

ஏ. ஐ தொழில்நுப்டம் மூலம் குரலை மாற்றி புகைப்படங்களை தவறாக பயன்படுத்திவருவதாகவும், அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும், எந்த அதிகாரப்பூர்வமற்ற சுயவிவரங்கள் அல்லது இடுகைகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் துருவ் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மட்டுமே வெளியாகும் என்றும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது

துருவ் விக்ரமின் புதிய படம்:

நடிகர் துருவ் விக்ரம், பைசன் படத்தை அடுத்ததாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது. இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படம் நடிப்பதாகவும், தெலுங்கு இயக்குநர் ஒருவருடன் புதிய படத்தில் இணைவதாகவும் சமீபகாலாமாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. ஆனால் இது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.