எனக்கு நடிக்கும் எண்ணமே போயிடுச்சி.. ஆனால் தனுஷ் என்னை தொடர்ந்து தயார்படுத்தினார் – ஆண்ட்ரியா
Andrea Jeremiah About Dhanush: ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் விரைவில் மாஸ்க் என்ற படமானது வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான நேர்காணலில் கலந்துகொண்ட இவர், தனுஷ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை மற்றும் பாடகியாகவும் இருந்துவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea Jeremiah). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் எல்லாம் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தற்போது தமிழ் மொழியில் மட்டும் கதாநாயகியாகவும், எதிர்மறை வேடங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் விரைவில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தில் நடிகர் கவின் (Kavin) கதாநாயகனாக நடிக்க, நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெற்றிமாறன் (Vetrimaaran) தயாரிக்க, அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் (Vikarnan Ashok) இயக்கியுள்ளார். இந்த மாஸ்க் படமானது பணம் கொள்ளை தொடர்பான மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இந்த படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இதில் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆண்ட்ரியா ஜெரெமையா, ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு முன் நடிப்பை விடுவதாக இருந்ததாகவும், தனுஷ் (Dhanush) அவரை நடிக்க செய்த விஷயம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ரஜினிகாந்தின் தலைவர்173 படத்திலிருந்து விலகிய சுந்தர் சி? குஷ்புவால் குழம்பிய ரசிகர்கள்!
தனுஷ் குறித்து வெளிப்படையாக பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா:
அந்த நேர்காணலில் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, “ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு முன்னே எனக்கு தனுஷை நன்றாகவே தெரியும். அவரும் நானும் நல்ல நண்பர்கள். அவர் எனது நடிப்பையும் பார்த்திருக்கிறார், நானும் அவரின் நடிப்பை பார்த்திருக்கிறேன். மேலும் எனது முதல் படத்திற்கு பின் எனக்கு நடிப்பதற்கு அந்த அளவிற்கு ஆர்வமில்லை. நான் நடிப்பை விட்டுவிட்டு எனது இசை தொடர்பான வேலைக்கு செல்லலாம் என நினைத்தேன். நானும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்தான். மியூசிக் தொடர்பாக படிக்கவேண்டும் என்றால் அதற்கு நிறைய பணம் தேவை.
இதையும் படிங்க: வெற்றிமாறன் ஒரு செயின் ஸ்மோக்கர்.. அந்த படத்தை தவிர்த்த காரணம் இதுதான் – ஆண்ட்ரியா ஜெரெமையா!
அந்த சமையத்தில் நான் ஒரு பேங்கில் பணம் கேட்டு இருந்தேன். எந்த பேங்கின் மேலாளர் என்னிடம் ஒரு மியூசிக்கிற்காக இவ்வளவும் பணம் தேவையா என என்னை பார்த்து சிரித்தார். அப்போதுதான் தனுஷ் எனக்கு கால் பண்ணிருருந்தார். இந்த மாதிரி எனது அண்ணன் செல்வா பண்ணும் படத்திற்கு ஒரு உயரமான பெண் தேவை என்கிறார். நீங்கள்தான் நடிக்கவேண்டும் என்று தனுஷ் என்னிடம் சொன்னார். நான் அதை வேண்டாமென மறுப்பதற்கு முன்னே, நீங்கள்தான் நடிக்கிறீர்கள் என தனுஷ் என்னை கட்டாயப்படுத்தினார். பின் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படம் நடிக்கவில்லை என்றால் தேசிய நெடுஞ்சாலை படத்தில் நடித்திருப்பேன்” என அந்த நேர்காணலில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
தனுஷ் குறித்து நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா பேசிய வீடியோ பதிவு :
#Andrea Recent
– #Dhanush and I are like mutual friends, so I think he saw an actor in me before I saw an actor in myself.
– I had no intention of acting, so he kept setting me up for these auditions.#Maskpic.twitter.com/bPoamn7aCM— Movie Tamil (@_MovieTamil) November 13, 2025
ஆண்ட்ரியா ஜெரெமையாவின் கைவசத்தில்இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 திரைப்படமும் வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகியுள்ள மனுஷி போன்ற படங்கள் ஆண்ட்ரியாவின் நடிப்பில் உருவாகி இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.