துராண்ட் கோடு அருகே கடும் மோதல்.. பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி
பாகிஸ்தானின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மதரஸாக்கள் மற்றும் வீடுகள் பெரிய அளவில் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் காரணம் என்று அந்த நாடு குற்றம் சாட்டினாலும், தாலிபான்கள் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான், பிப்ரவரி 27, 2026: பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே போர் சூழல் நிலவி வருகிறது. தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை நடந்த தாக்குதல்களில் 8 பாகிஸ்தான் ராணுவ நிலைகளை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தற்போது பாக்–ஆப்கானிஸ்தான் எல்லை மற்றும் துராண்ட் கோடு (Durand Line) அருகே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி:
பாகிஸ்தான் ராணுவ தளங்களை ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் குறிவைத்து வருகின்றனர். பாகிஸ்தானின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான 2,611 கிலோமீட்டர் நீளமான எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை குறிவைக்கும் திறன் தமக்கு உள்ளதாக ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: பிரதமர் நரேந்திர மோடி – இஸ்ரேல் அதிபர் சந்திப்பு – கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
பாகிஸ்தானின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மதரஸாக்கள் மற்றும் வீடுகள் பெரிய அளவில் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் காரணம் என்று அந்த நாடு குற்றம் சாட்டினாலும், தாலிபான்கள் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
19 ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தகவல்:
பாகிஸ்தானின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 19 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மற்றும் ஒரு தலைமையகத்தை கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட பதிவில், “பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, துராண்ட் கோட்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
ஹமீத் கர்சாய் குற்றச்சாட்டு:
முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தனது ட்விட்டர் பதிவில், பாகிஸ்தான் விமானங்கள் மீண்டும் காபூல், கந்தஹார் மற்றும் பாக்டியா பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் தங்கள் நாட்டை முழுமையான ஒற்றுமையுடன் பாதுகாப்பார்கள் என்றும், பலத்தை பயன்படுத்தினால் தைரியமாக பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வன்முறை மற்றும் குண்டுவெடிப்புகளால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து பாகிஸ்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றும், அதன் கொள்கையை மாற்றி நல்ல அண்டைநாடு உறவுகள், பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மறையான பாதையை பின்பற்ற வேண்டும் என்றும் கர்சாய் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி எச்சரிக்கை:
🇵🇰 “Pakistan will not compromise on peace & territorial integrity. Our armed forces’ response is comprehensive & decisive. Those who mistake our peace for weakness will face a strong response — and no one will be beyond reach.”
~ President Asif Ali Zardari— The President of Pakistan (@PresOfPakistan) February 26, 2026
இதற்கிடையில், தாக்குதல்களுக்கு பதிலளித்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி,
“பாகிஸ்தான் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்யாது. நமது ஆயுதப்படைகளின் பதில் விரிவானதாகவும் தீர்மானமானதாகவும் இருக்கும். நமது அமைதியை பலவீனமாக எண்ணுபவர்களுக்கு வலுவான பதில் அளிக்கப்படும். யாரும் தப்பிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.