திடீரென சரிந்த மின் கம்பம்.. மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான சிறுமி!
9th Standard Girl Died After Electrocuted | லக்னோவில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சாலையில் நடந்துச் சென்ற நிலையில், மின்கம்பம் சரிந்து விழுந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ, ஆகஸ்ட் 04 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், ஹர்டோய் மாவட்டம், பஹ்வான் கிராமத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி ரகினி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி மின்கம்பம் சரிந்து விழுந்த விபத்தில், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மின்கம்பம் சரிந்த விபத்தில் பள்ளி மாணவி பலியானது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மளிகை கடைக்குச் சென்ற மாணவிக்கு நடந்த சோகம்
மாணவி ரஜினி நேற்று (ஆகஸ்ட் 03, 2026) மாலை தனது தோழியுடன் மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அப்போது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருந்த அவர் மீது அந்த பகுதியில் இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் மிக கடுமையான மின்சார தாக்குதலுக்கு உள்ளான அந்த மாணவி படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க : போதையில்லா இளைஞர்களுக்கான விகாசித் பாரத் நிகழ்ச்சி.. டெல்லியில் பிரம்மாண்டம்
துடிதுடித்து பலியான சிறுமி – பதைபதைக்க வைக்கும் வீடியோ
TRAGIC | Class 9 Student Killed After Electricity Pole Collapses in UP’s Hardoi
A Class 9 student, Ragini Shukla, was killed after an electricity pole suddenly collapsed on her while she was on her way to a grocery store with a friend in Hardoi, Uttar Pradesh. Her friend… pic.twitter.com/OVoNfGFyD6
— Atulkrishan (@iAtulKrishan1) August 4, 2026
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.