AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மனித குளத்திற்கு கலங்கரை விளக்கமாக திகழும் காந்தியின் வாழ்க்கை.. பிரதமர் மோடி மரியாதை..

Gandhi Jayanthi: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகாத்மா காந்தியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சத்தியம், அஹிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மனித குளத்திற்கு கலங்கரை விளக்கமாக திகழும் காந்தியின் வாழ்க்கை.. பிரதமர் மோடி மரியாதை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 02 Oct 2026 08:50 AM IST

அக்டோபர் 2, 2026: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

காந்தி ஜெயந்தி – பிரதமர் மோடி மரியாதை:


ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மகாத்மா காந்தியின் நினைவாக நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதையடுத்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, டெல்லி துணைநிலை ஆளுநர், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர்கள் மனோகர்லால் கட்டார் உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: 9/11 போலவான தாக்குதல் நடப்பதை தடுத்த இந்தியர்.. யுபிஎஸ்சி நிகழ்ச்சியில் ஸ்மித் மச்சாரை புகழ்ந்த பிரதமர் மோடி

மனித குளத்திற்கு கலங்கரை விளக்கமாக திகழும் காந்தியின் வாழ்க்கை:


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகாத்மா காந்தியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சத்தியம், அஹிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது வாழ்க்கை அனைத்து காலங்களிலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அனைத்து உயிர்களிடமும் வெறுப்பின்றி, நட்புடனும் கருணையுடனும் இருப்பது காந்தியின் பண்புகளில் முக்கியமானதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பற்று மற்றும் அகங்காரத்தில் இருந்து விலகி இருப்பது, இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலையுடன் இருப்பது, மன்னிக்கும் குணம் ஆகியவை மகாத்மா காந்தியின் சிறப்புகளாக பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: போராட்டப் பாதை: இந்திய விடுதலைக்கு வித்திட்ட முக்கிய இயக்கங்கள்!

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகள்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. காந்தியின் கொள்கைகள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் பிரார்த்தனைகள், பஜனைப் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ராஜ்காட்டில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்திய நிலையில், நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகள் மற்றும் நினைவிடங்களிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

Follow Us