9/11 போலவான தாக்குதல் நடப்பதை தடுத்த இந்தியர்.. யுபிஎஸ்சி நிகழ்ச்சியில் ஸ்மித் மச்சாரை புகழ்ந்த பிரதமர் மோடி
யு.பி.எஸ்.சி-யின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வீரத்தைக் குறிப்பிட்டார். ஒரு இந்திய விமானி 9/11 தாக்குதல் நடப்பதைத் தடுத்தார் என்று அவர் கூறினார். ஸ்மித்தின் இந்தச் சாதனை நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்று குறிப்பிட்டு பேசினார்
அக்டோபர் 1ம் தேதியான யு.பி.எஸ்.சி நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானி ஸ்மித் மச்சரின் வீரத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். ஒரு இந்திய விமானி 9/11 தாக்குதல் நடப்பதைத் தடுத்தார் என்று அவர் கூறினார். துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “நேற்று நடந்த சம்பவமும், இந்திய கேப்டன் ஸ்மித் வெளிப்படுத்திய பொறுமை, ஞானம் மற்றும் தைரியமும், இன்று இஸ்ரேலியப் பிரதமர் கூறியது போல், இந்த இந்திய விமானி 9/11 தாக்குதல் நடப்பதைத் தடுத்ததும், ஒவ்வொரு குடிமகனையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது” என்றார்.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “இன்று நான் அவரது (ஸ்மித் மச்சாரின்) தந்தை பூபேந்திர பாய், அவரது தாயார் கீதா பாபி மற்றும் அவரது மனைவி சோனல் ஆகியோருடனும் பேசினேன். இன்று, ஒட்டுமொத்த உலகமும் அவரைக் குறித்துப் பெருமை கொள்கிறது. ஸ்மித்தின் நல்ல ஆரோக்கியத்திற்காகப் பிரார்த்தனை செய்யுமாறும், இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள சகோதரர் ஸ்மித்துக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறும் நமது நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்
வீடியோ
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, “… The incident that occurred yesterday, Captain Smit of India demonstrated remarkable patience, presence of mind, and courage; indeed, as the Prime Minister of Israel stated today, an Indian prevented a 9/11-style tragedy.”… https://t.co/mirnEuyxzs pic.twitter.com/Q3JyfmnhOc
— ANI (@ANI) October 1, 2026
கேப்டன் மச்சார் குறித்து நாடு பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி
இந்த நிகழ்வுக்கு முன்பே, இந்திய விமானி ஸ்மித் மச்சரின் துணிச்சலையும் வீரத்தையும் பாராட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு நாயகன். மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, படுகாயமடைந்த போதிலும், அவர் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றினார். அவர் அபாரமான துணிச்சலையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தினார். அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதுடன், ஒரு பெரும் துயரத்தையும் தடுத்தது,” என்று பிரதமர் மோடி கூறினார். “கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடையவும், புத்துணர்ச்சி பெறவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.” என்றார்
கேப்டன் ஸ்மித் மச்சரின் வீரச்செயல் உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை ஒரு உண்மையான நாயகன் என்று அழைத்தார். இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக்கும் ஸ்மித்தைப் பாராட்டி, “நாங்கள் ஸ்மித்துக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். விமானத்தின் காக்பிட்டைத் திறக்க அவர் தன் உயிரைப் பணயம் வைத்தார்” என்று கூறினார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஸ்மித்தைப் பாராட்டி, அவரை ஒரு நாயகன் என்று அழைத்தார். காயமடைந்திருந்தபோதிலும், அவர் அசைக்க முடியாத தைரியத்தை வெளிப்படுத்தி, 180 பேரின் உயிரைக் காப்பாற்றி, விமானம் விபத்துக்குள்ளாவதைத் தடுத்தார்.