AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: என் வேலை ஈஸியாகும்.. தோனி ஓய்வு குறித்து ஜாகீர் கான் ஓபன் டாக்!

MS Dhoni Retirement: ஐபிஎல் 2027-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக எம்.எஸ்.தோனியின் பயணம் நிறைவடைந்தது. அவர் இனி வழிகாட்டியாகச் செயல்படுவார். தோனியின் இந்த எதிர்பாராத முடிவுகுறித்து சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது அணிக்கு உணர்வுப்பூர்வமான தருணம் என்றாலும், தோனியின் அனுபவம் வழிகாட்டியாகப் பெரிதும் உதவும் என ஜாகீர் கான் கூறியுள்ளார்.

IPL 2027: என் வேலை ஈஸியாகும்.. தோனி ஓய்வு குறித்து ஜாகீர் கான் ஓபன் டாக்!
ஜாகீர் கான் - எம்.எஸ்.தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Nov 2026 17:52 PM IST

ஐபிஎல்-லின் (IPL 2027) மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இனி ஒரு வீரராக ஓய்வுபெற்று வழிகாட்டியாகச் செயல்படுவார். கடந்த 2026 நவம்பர் 17ம் தேதி ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் 2027-க்கான வீரர்களைத் தக்கவைக்கும் பட்டியலில் இருந்து முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐபிஎல்லின் 19 சீசன்கள் கொண்ட ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையில், தோனியின் இந்த முடிவு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான் தனது முதல் கருத்தைத் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ: பஞ்சாப் அணியில் ஹர்திக் ரோல் என்ன..? ரிக்கி பாண்டிங் ப்ளான் இதுதான்!

தோனியின் ஓய்வு பற்றி ஜாகீர் கான் கூறியது என்ன..?


சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நடந்த ஒரு உரையாடலின் போது ஜாகீர் கான் கூறியதாவது, “இது அந்த சுழற்சியின் கடைசி ஆண்டு என்பதால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் அதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. ஆனால் அவர் எம்.எஸ். தோனி. தனக்கு எது சரியான முடிவு, எப்போது அதை எடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அது அவருடைய சொந்த முடிவுதான், ஆனால் தனிப்பட்ட முறையில், எனக்கு அது எதிர்பாராததாக இருந்தது. இதுபோன்ற விஷயத்தை பெரிய செய்தியாக உருவாக்குவதில் அவருக்கு விருப்பமில்லை என்பதால், தோனி அதைப் பற்றி மிகவும் சாதாரணமாக அறிவித்தார்.

என் வேலை குறையும்..

ALSO READ: தோனியின் நம்பர் 7 ஜெர்சி இனி இல்லை.. சிஎஸ்கே எடுத்த முக்கிய முடிவு.. ஏன் தெரியுமா?

கடந்த சில நாட்கள் அணியில் உள்ள அனைவருக்கும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ஒவ்வொரு வருடத்தையும் போலவே, தோனி மீண்டும் களத்தில் இறங்கி அணிக்காக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு வீரராக இல்லாமல். வேறு ஒரு பொறுப்பில் இருக்க போகிறார். அதனால், கலவையான உணர்வுகள் நிலவுகின்றன. தோனி வழிகாட்டியாகப் பொறுப்பேற்பது குறித்து தான் உற்சாகமாக இருக்கிறோம். அவரது அனுபவமும் வழிகாட்டுதலும் அணிக்கு பெரிதும் உதவும். தோனி என்னுடன் பொறுப்பைப் பகிர்ந்துகொண்டு, எங்களைச் சரியான திசையில் வழிநடத்தி என் வேலையை எளிதாக்குவார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், அவரது இந்த முடிவு குறித்து நான் உணர்ச்சிவசப்படுகிறேன்” என்றார்.

Follow Us