AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

MS Dhoni: ஐபிஎல் ஓய்வுக்கு பிறகு.. கூலாக மனைவி பிறந்தநாளை கொண்டாடிய கூல் கேப்டன்.. வைரலாகும் வீடியோ!

Sakshi Dhoni's Birthday: ஐபிஎல் 2027 சீசனுக்கு முன் ஓய்வு அறிவித்த எம்.எஸ். தோனியின் மனைவி சாக்ஷி தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் மலைப்பகுதியில் தோனி கார் ஓட்டும் வீடியோ வெளியானது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி, இனி சிஎஸ்கே அணியின் வழிகாட்டியாக ஐபிஎல் 2027-ல் பங்கேற்கவுள்ளார்.

MS Dhoni: ஐபிஎல் ஓய்வுக்கு பிறகு.. கூலாக மனைவி பிறந்தநாளை கொண்டாடிய கூல் கேப்டன்.. வைரலாகும் வீடியோ!
மனைவி சாக்‌ஷியுடன் எம்.எஸ்.தோனி Image Source: sakshisingh_r/Instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2026 10:46 AM IST

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக, ஐபிஎல்லில் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, இந்திய அணியின் (Indian Cricket Team) முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் (MS Dhoni) மனைவி சாக்ஷி, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சில புகைப்படங்களையும் ஒரு வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சாக்ஷி தனது 38வது பிறந்தநாளை நேற்று அதாவது 2026 நவம்பர் 19ம் தேதி கொண்டாடினார். தோனியும் சாக்ஷியும் மலைப்பகுதியில் ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுதைக் கழித்தனர். அப்போது, தோனி இயற்கையை ரசித்தப்படி காரை ஓட்டும் வீடியோ ஒன்றும் வெளியானது.

ALSO READ: தோனிக்கு இனிமேதான் அழுத்தம் அதிகம்.. சேவாக் இப்படி சொல்ல காரணம் என்ன?

மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய தோனி:

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Singh (@sakshisingh_r)

சாக்ஷி தோனி தனது 38வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவரது நெருங்கிய நண்பர்களும் உடனிருந்தனர். இந்தப் புகைப்படம் வீட்டில் எடுக்கப்பட்டது. அதே பதிவில் உள்ள கடைசிப் புகைப்படமும், அதற்கு முந்தைய வீடியோவும் தற்போது அவை, இருவரும் இந்த மறக்க முடியாத அளவிற்கு பிறந்தநாளை மலைகளுக்கு மத்தியில் கொண்டாடியதை வெளிப்படுத்துகின்றன.

அதில், எம்.எஸ். தோனி மலைப்பகுதியில் வாகனம் ஓட்டும் வீடியோ இடம்பெற்றுள்ளது. சாக்ஷி தோனி பக்கத்து இருக்கையில் இருந்து அந்த வீடியோவைப் படம்பிடித்துள்ளார். கடைசிப் பதிவில், எம்.எஸ். தோனியும் சாக்ஷியும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர். தோனி கருப்பு நிற அரைக்கை டி-ஷர்ட்டும், சாக்ஷி ஸ்வெட்டரும் அணிந்துள்ளனர்.

ALSO READ: பணிச்சுமை, காயம்.. ஐபிஎல் 2027ல் தானாக விலகிய அனுபவ வீரர்கள் பட்டியல்..!

தோனி அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு:

தோனி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். தனது கேப்டன்சியின் கீழ் இந்தியாவை டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளுக்கு வழிநடத்திய மகேந்திர சிங் தோனி, 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தோனி ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார், ஆனால், கடந்த 2026 நவம்பர் 17ம் தேதி ஐபிஎல் தொடரிலிருந்தும் விடைபெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 முறை சாம்பியன் பட்டத்திற்கு அழைத்து சென்ற தோனி, ஐபிஎல் 2027 தொடருக்கான அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி முதல் முறையாக ஐபிஎல் ஏல மேசையில் சிஎஸ்கே அணிக்கு ஏலம் எடுக்கலாம். வரவிருக்கும் தொடருக்கான மினி ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2027ல் வழிகாட்டியாக தோனி சிஎஸ்கே அணிக்கு எத்தகைய பங்காற்றுவார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow Us