AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

U19 Asia Cup 2026: U19 ஆசியக் கோப்பை நாயகனாக ஆர்யவீர்.. சேவாக் பெருமிதம்..!

Virender Sehwag Son: முன்னாள் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் தொடர் நாயகனாக ஜொலித்தார். 361 ரன்கள் குவித்து, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார். தனது மகன் பெரிய ரன்கள் எடுத்தது குறித்து பெருமிதம் தெரிவித்த விரேந்தர் சேவாக், திறமையால் மட்டுமே விமர்சனங்களை கடக்க முடியும் என்று கூறினார்.

U19 Asia Cup 2026: U19 ஆசியக் கோப்பை நாயகனாக ஆர்யவீர்.. சேவாக் பெருமிதம்..!
ஆர்யவீர் சேவாக் - விரேந்தர் சேவாக்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2026 08:00 AM IST

முன்னாள் இந்திய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் , தனது அற்புதமான ஆட்டத்தால் சமூக வலைதளங்களில் அதிகளவில் கவனம் பெற்று வருகிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை (U19 Asia Cup 2026) இந்திய அணி வெல்வதில் முக்கிய காரணமாகிய தனது மகனின் இந்தச் சாதனை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் தற்போது பெருமிதம் கொண்டுள்ளார். அதில், ஒரு பிரபலமான குடும்பப் பெயருடன் வரும் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், களத்தில் பெரிய ரன்களைக் குவித்து ஆர்யவீர் சேவாக் (Aaryavir Sehwag) கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் உட்பட 361 ரன்கள் குவித்த ஆர்யவீர் சேவாக், தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான இறுதிப் போட்டியில் 58 ரன்கள் குவித்து, இந்திய அணி வெற்றி பெறவும் உதவினார்.

ALSO READ: பாகிஸ்தானை வென்ற இந்தியா U19.. உணர்ச்சி பொங்க பாராட்டிய காம்பீர்!

அதிக ரன்கள் எடுக்க வேண்டும்..


மகன் குறித்து பேசிய சேவாக், ‘இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி ஆசியக் கோப்பையை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்யாவீரின் பங்களிப்பு சிறப்பானது. அவர் வெறுமனே ரன்கள் எடுக்கவில்லை, ஒரு பெரிய ரன் எடுத்தார். இந்த வெற்றிக்காக முழு அணிக்கும் எனது வாழ்த்துகள். நான் அவனிடம் எப்போதும் ஒரு விஷயத்தைச் சொல்வேன். மரியாதையைப் பெற விரும்பினால், பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்று நான் கூறுவேன். இந்தத் தொடரில் அவன் அதைத்தான் செய்திருக்கிறான்” என்றார்.

ALSO READ: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்..

தொடர்ந்து பேசிய சேவாக், “ஒரு வீரரின் ஆட்டத்தை மக்கள் தங்கள் கண்களால் பார்க்கும் வரை, அவரது பெயரை வைத்தே கருத்துக்களை உருவாக்குகிறார்கள். ஆனால், அவர் சிறப்பாகச் செயல்படும்போதுதான் திறமை அங்கீகரிக்கப்படுகிறது. ஆர்யவீரும் தனது தந்தையின் பெயரின் காரணமாகப் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதுபோன்ற விமர்சனங்கள் எதிர்காலத்திலும் தொடரலாம். ஆனால் இப்போது அவரிடம் திறமை இருக்கிறது. அவரால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே, வரும் நாட்களில் நாட்டு மக்களிடமிருந்து அவருக்கு அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

Follow Us