AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆந்திராவுக்கு தமிழக முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா?.. முன்னாள் ‘கைடன்ஸ்’ ஊழியர்களால் வெடித்த பரபரப்பு!

Tamil Nadu Guidance staff: தமிழகத்தின் 'கைடன்ஸ்' நிறுவனத்தில் பணியாற்றிய 15 பேர் கடந்த ஜூன் மாதம் விலகிய நிலையில், அவர்களில் 4 பேர் ஆந்திரப் பொருளாதார மேம்பாட்டுக் குழுமத்தில் இணைந்து விருது பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத் தொழில் முதலீட்டுத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததா என்ற கேள்வியும், ரகசியப் பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லாதது குறித்த விவாதமும் எழுந்துள்ளது.

ஆந்திராவுக்கு தமிழக முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா?.. முன்னாள் ‘கைடன்ஸ்’ ஊழியர்களால் வெடித்த பரபரப்பு!
தமிழக அரசு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Nov 2026 07:55 AM IST

சென்னை, நவ.20: தமிழ்நாட்டின் தொழில் துறையின் கீழ் 1992-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் வழிகாட்டி நிறுவனமான ‘கைடன்ஸ்’ (Guidance), உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கி, பன்னாட்டு நிறுவனங்களை அணுகித் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வசதிகள் மற்றும் சலுகைகளை எடுத்துரைத்து முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த நிறுவனத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர அரசு விரும்பிய நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 15 பேருக்கு விலகிச் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் அவர்கள் அங்கிருந்து விலகினர். இந்தச் சூழலில், முதல் 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதிலும், தமிழகத்திற்கு வர வேண்டிய பல தொழில் முதலீடுகளும் நிறுவனங்களும் ஆந்திரப் பிரதேசத்திற்குச் செல்வதாகத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

இதையும் படிக்க: தமிழகத்தின் முதலீட்டு கட்டமைப்பு பலவீனமானதா? வழிகாட்டு நிறுவன அதிகாரிகள் பணி நீக்கம் குறித்து டி.ஆர்.பி. ராஜா விமர்சனம்

ஆந்திர குழுமத்தில் இணைந்த 4 பேர்:

கைடன்ஸ் நிறுவனத்திலிருந்து பதவி விலகிய 15 பேரில், கிறிஸ்டோபர், லாரன்ஸ், பிரபாகரன் மற்றும் பிரிஜா பிரசாத் உள்ளிட்ட 4 பேர் சமீபத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் குழுமத்தில் இணைந்துள்ளனர். அங்குத் தாங்கள் மேற்கொண்ட பணிகள் மற்றும் சிறப்பாகச் செயல்பட்டதற்காக வழங்கப்பட்ட பாராட்டு விழா மற்றும் விருது குறித்த தகவல்களை அந்த நால்வரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர்கள் ஆந்திர மாநிலக் குழுமத்தில் இணைந்து கவுரவிக்கப்பட்டிருப்பது, தற்போது தொழில் மற்றும் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ரகசியத் தகவல்கள் கசிந்ததா என்ற கேள்வி:

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அது தொடர்பான உத்திகள் குறித்த தகவல்கள் ஆந்திரப் பிரதேசப் பொருளாதார மேம்பாட்டுக் குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கலாமா என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒப்பந்தப் பணியாளர்களிடம் ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் முறையாகச் செய்யப்படாததன் காரணமாக, இது தொடர்பாக உடனடியாகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நிலவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையும் படிக்க: “பணம் யாருக்குச் சென்றது?”.. அன்பில் மகேஷை காவலில் விசாரிக்க மனு.. சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிரடி!

தொழில் துறையின் விளக்கத்திற்கான எதிர்பார்ப்பு:

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் தமிழகத்திலிருந்து முதலீடுகள் இடம்பெயர்வதாக எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முன்னாள் கைடன்ஸ் பணியாளர்களின் இந்தச் செயல்பாடுகள் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன. தமிழகத் தொழில் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்குக் கசிந்தனவா என்பது குறித்த சந்தேகங்களுக்குத் தொழில் துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow Us