AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தின் முதலீட்டு கட்டமைப்பு பலவீனமானதா? வழிகாட்டு நிறுவன அதிகாரிகள் பணி நீக்கம் குறித்து டி.ஆர்.பி. ராஜா விமர்சனம்

TRB Raja On Data Leak: 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்களே தற்போது வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபோது அவர்களைப் பணியிலிருந்து வெளியேற்றாமல், அவர்களின் அனுபவத்திற்கும் நிறுவனத்தின் தொடர்ச்சிக்கும் மதிப்பளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதலீட்டு கட்டமைப்பு பலவீனமானதா? வழிகாட்டு நிறுவன அதிகாரிகள் பணி நீக்கம் குறித்து டி.ஆர்.பி. ராஜா விமர்சனம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Nov 2026 07:09 AM IST

நவம்பர் 20, 2026: தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தைச் சேர்ந்த 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் முதலீட்டு கட்டமைப்பை சிறுமைப்படுத்தும் வகையில் தற்போதைய அரசு செயல்படுவதாக திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார்.

தகவல் கசிவு – 15 அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்:

தமிழகத்திற்கு வரவிருந்த சில முக்கிய தொழில் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு சென்றதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, முதலீடுகள் தொடர்பாக நிறுவனங்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே பரிமாறப்பட்ட ரகசியத் தகவல்கள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ரகசியக் காப்பு விதிகளை மீறியதாகக் கூறி தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தைச் சேர்ந்த 15 உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் தற்போது ஆந்திரப் பிரதேச அரசுப் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் முதலீட்டு கட்டமைப்பும் தொழில்துறை சூழலும் பலவீனமானதா?

இந்த விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பல ஆண்டுகளாக தமிழகத்தின் சிறந்த நிபுணர்களால் உருவாக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்தின் நற்பெயரை தற்போதைய அரசு அரசியல் நோக்கத்துடன் சீர்குலைப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு சில ஊழியர்கள் வெளியேறிவிட்டதால் தமிழகத்தின் முதலீடுகள் காணாமல் போய்விடும் என்று அரசு கூறுவது ஏற்க முடியாதது என்றும், தமிழகத்தின் முதலீட்டு கட்டமைப்பும் தொழில்துறை சூழலும் அவ்வளவு பலவீனமானதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: “பணம் யாருக்குச் சென்றது?”.. அன்பில் மகேஷை காவலில் விசாரிக்க மனு.. சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிரடி!

2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்களே தற்போது வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபோது அவர்களைப் பணியிலிருந்து வெளியேற்றாமல், அவர்களின் அனுபவத்திற்கும் நிறுவனத்தின் தொடர்ச்சிக்கும் மதிப்பளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் திறனைக் குறைத்து மதிப்பிடுவதையும் நிறுத்த வேண்டும்

மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக முக்கிய முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரி ஒருவர் வெளியேறியபோதுகூட தங்களது அரசு கண்ணியத்துடன் நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் முதலீடுகளை யாராலும் எளிதில் வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்றும், ஆனால் திறமையற்ற, பாதுகாப்பற்ற உணர்வுடன் எடுக்கப்படும் முடிவுகளும் உணர்வற்ற நிர்வாக அணுகுமுறையும் முதலீடுகளை வெளியேறச் செய்யக்கூடும் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க:  நவம்பர் 23ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

இறுதியாக, துறையைச் சிறுமைப்படுத்துவதையும் தமிழகத்தின் திறனைக் குறைத்து மதிப்பிடுவதையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள டி.ஆர்.பி. ராஜா, நிறுவனங்களுக்குத் தேவை அரசியல் நாடகங்கள் அல்ல, திறமையான தலைமைதான் எனத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow Us