AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“பணம் யாருக்குச் சென்றது?”.. அன்பில் மகேஷை காவலில் விசாரிக்க மனு.. சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிரடி!

Anbil Mahesh custody petition CCB: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரை இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

“பணம் யாருக்குச் சென்றது?”.. அன்பில் மகேஷை காவலில் விசாரிக்க மனு.. சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிரடி!
அன்பில் மகேஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Nov 2026 06:44 AM IST

சென்னை, நவ.20: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது தொடர்பாகப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு, தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் தொடர்ச்சியாகப் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க : திமுகவில் இணையும் முடிவில் செல்வப்பெருந்தகை? ஆதரவாளர்களிடம் கூறிய அந்த வார்த்தை.. என்ன நடக்கிறது காங்கிரஸில்!

2 நாள் காவலில் விசாரிக்கக் கோரிக்கை:

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகிய மூன்று பேரையும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி, தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் முக்கிய விவரங்களைத் தெளிவுபடுத்த இந்தக் காவல் விசாரணை மிகவும் அவசியமானது என்ற அடிப்படையில் போலீசார் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை:

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காகப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பணம் வசூலித்தது யார், மொத்தமாக எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது மற்றும் இறுதியில் யாருக்குப் பணம் சென்றது என்பது குறித்துத் தீவிரமாக விசாரிக்க வேண்டியிருப்பதாகப் போலீசார் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். லஞ்சப் பணத்தின் புழக்கம், பரிமாற்ற முறைகள் மற்றும் இதில் தொடர்புடைய இதர நபர்கள் குறித்த முழுமையான தகவல்களைப் பெறுவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மீனாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை – சிறைக்கு செல்லும்போது நிஷாந்த் பேச்சு

விரைவில் விசாரணைக்கு வரும் வழக்கு:

மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள இந்தக் காவல் விசாரணை மனு, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வரும்போது காவல்துறை மற்றும் எதிர் தரப்பு ஆகிய இரு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் விரிவாக முன்வைக்கப்படும். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குவதா வேண்டாமா என்பது தொடர்பாக நீதிபதி பிறப்பிக்கவுள்ள உத்தரவு இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கியக் கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us