AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீனாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை – சிறைக்கு செல்லும்போது நிஷாந்த் பேச்சு

Madurai Jewellery Robbery Case : மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் என்ற நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான யூடியூபர் நிஷாந்த், தனது தோழி மீனாட்சிக்கும் தந்தைக்கும் இதில் தொடர்பில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீனாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை –  சிறைக்கு செல்லும்போது நிஷாந்த் பேச்சு
நிஷாந்த் - மீனாட்சி
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Nov 2026 20:06 PM IST

மதுரை, நவம்பர் 19 : மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான யூடியூபர் நிஷாந்த் (Youtuber Nishanth), தனது தோழி மீனாட்சிக்கும் தந்தைக்கும் இதில் தொடர்பில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழகத்தையே உலுக்கிய மதுரை பைபாஸ் சாலை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், முக்கியக் குற்றவாளியான யூடியூபர் நிஷாந்த் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனாட்சிக்கு தொடர்பில்லை என நிஷாந்த் வாக்குமூலம்

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் என்ற நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் சம்பவத்தில், காவல்துறையினர் நிஷாந்த் மட்டுமின்றி அவரது தோழி மீனாட்சி மற்றும் தந்தை சுரேஷ் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில், மேல் விசாரணைக்காக நிஷாந்தை போலீஸ் காவலில் எடுக்கக் கோரி மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்திருந்தது.

இதையும் படிக்க : கார்த்திகை தீபம்…. – திருவண்ணாமலைக்கு 16 மெமு ரயில்கள் அறிவிப்பு – எங்கெல்லாம் தெரியுமா?

இந்த நிலையில் மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்துக்கு ஒரு நாள் மட்டும் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் 5 நாட்கள் காவல் கோரிய நிலையில் ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீதிமன்றத்தில் பேசிய நிஷாந்த், இந்த நகைக்கடை கொள்ளைச் சம்பவத்துக்கும், தனது தோழி மீனாட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல் எனது தந்தைக்கும் இதில் எவ்விதத் தொடர்பும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் பேசுவதற்கு மறுத்த நீதிபதி, தொடர்ந்து, வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பதைக் கண்டறிய நிஷாந்தை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : காலி தொகுதிகள் 6- ஆக உயர்வு! கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? களமிறங்குகிறாரா ஸ்டாலின்!

மதுரை நகைக் கடை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன், நிஷாந்தை காவலில் எடுத்துக் கொள்ளை முயற்சி மற்றும் கொள்ளை நடந்த விதம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த விசாரணையின் மூலமாக வழக்கின் முழுமையான பின்னணி மற்றும் பிற தொடர்புகள் தெளிவாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் மீனாட்சிக்கும் இதற்கும் தொடர்பில்லை என நிஷாந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us