U19 Asia Cup 2026: ஆசியக் கோப்பையில் இந்திய U19 அணியே ஆதிக்கம்.. வெற்றியாளர்கள் முழு பட்டியல் இதோ!
Winners of the Under-19 Asia Cup: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நவம்பர் 14 அன்று நடைபெறும் இந்தப் போட்டி, கடந்த இரண்டு பைனல்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பாகும். நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி, இளம் இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க இப்போட்டி மிகவும் முக்கியமானது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை பைனலில் (U19 Asia Cup) இந்தியா மற்றும் பாகிஸ்தான் (IND U19 vs PAK U19) அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியானது நாளை அதாவது 2026 நவம்பர் 14ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது இம்முறை இந்திய அணி, கோப்பையை வெல்லும் சவாலை மட்டுமல்லாமல், கடந்த 2 பைனல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முயற்சிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்தப் போட்டி இளம் வீரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதையடுத்து, இந்திய அணி இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்வார்கள்.
ALSO READ: 4வது முறையாக பைனலில் சந்திக்கும் இந்தியா – பாகிஸ்தான்.. எந்த அணி கெத்து?
தொடர்ச்சியாக 2 முறை பைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா:
ஆசியக் கோப்பையில் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி ஒரு சிறந்த சாதனையைப் படைத்துள்ளது. அதாவது, இந்திய அண்டர் 19 அணி 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இருப்பினும், கடந்த 2 தொடர்களின் இறுதிப் போட்டிகளில் அது ஏமாற்றத்தைச் சந்தித்தது. 2024 இறுதிப் போட்டியில், இந்தியா வங்கதேசத்தை எதிர்கொண்டு 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து, 2025 இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பாகிஸ்தான், இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டத்தை வென்றது. இப்போது, மீண்டும் ஒருமுறை, இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. தனது முந்தைய தோல்விக்குப் பழிவாங்கி கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.




நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் பாகிஸ்தான்:
பாகிஸ்தான் நடப்பு சாம்பியன் ஆகும். இந்தத் தொடரில், லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. எனவே, இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி எப்போதுமே சிறப்பானது, எனவே, இறுதிப் போட்டியின் விறுவிறுப்பு தனித்துவமானதாக இருக்கும். இந்திய ரசிகர்கள் இந்த இளம் அணியைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். தொடர்ச்சியாக 2 இறுதிப் போட்டிகளில் அடைந்த தோல்விப் பாதையை முறியடித்து, இந்த முறை இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி பட்டத்தை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ALSO READ: இந்தியா U19 – பாகிஸ்தான் U19 பைனல் 2026: எப்போது, எங்கே பார்க்கலாம்? நேரலை விவரங்கள் இதோ!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றவர்கள்:
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை 8 முறை (1989, 2003, 2012, 2013–14, 2016, 2018, 2019, 2021) வென்றுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 2 முறை (2012, 2025) ஆகிய ஆண்டுகளிலும், வங்கதேசம் 2 முறை (2023,2024) ஆகிய ஆண்டுகளிலும் வென்றுள்ளது. ஆப்கானிஸ்தான் 2017-ல் ஒருமுறை பட்டத்தை வென்றது. 2012ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வென்றது.