PM Modi: உள்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு.. பெங்களூருவில் பிரதமர் மோடி பேச்சு!
Prime Minister Narendra Modi Speech: எந்தவொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் உள்கட்டமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மேம்பட்ட இணைப்பு வசதிகள் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என பெங்களூருவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இன்று அதாவது 2026 நவம்பர் 13ம் தேதி பெங்களூருவில் ரூ.15,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் . அங்கு கூடியிருந்தோரிடம் உரையாற்றிய பிரதமர், ஒரு நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் கர்நாடகாவையும் (Karnataka), நாட்டின் பிற பகுதிகளையும் மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் முழு பேச்சு:
பெங்களூருவில் பேசிய பிரதமர் மோடி, “பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. ரூ.15,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கப்படுவதால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் கிடைக்கிறது. இந்தத் திட்டங்கள் கர்நாடகாவின் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேலும் வலுப்படுத்தும்” என்று கூறினார்.




திட்டங்கள் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்..
பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகையில், “இன்று தொடங்கப்படும் திட்டங்கள் இந்த வளர்ச்சிப் பயணத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும். அவை, வளர்ச்சியடைந்த கர்நாடகாவையும், அதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவையும் கட்டமைப்பதற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். மேலும், அவை பெங்களூருவின் தொழில்நுட்ப நகரம் என்ற அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும்.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் உள்கட்டமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மேம்பட்ட இணைப்பு வசதிகள் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. இந்த வளர்ச்சி வாய்ப்புகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும்போது, வறுமைக்கு எதிரான போராட்டமும் வலுப்பெறுகிறது. இதனால்தான் கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் சுமார் 50 கோடி குடிமக்கள் கடும் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்,” என்றுகூறினார்.
நம்ம மெட்ரோவின் வெற்றி ஒரு திட்டத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை: பிரதமர் மோடி
டெல்லி-என்சிஆர் மற்றும் மும்பை பெருநகரப் பகுதிக்குப் பிறகு, பெங்களூருவும் 100 கி.மீ மெட்ரோ வலையமைப்பை எட்டியுள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “நம்ம மெட்ரோவின் இந்த வெற்றி ஒரு திட்டத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. இது, வாழ்வதையும் பயணத்தையும் எளிதாக்கும் நாட்டின் புதிய அணுகுமுறையின் விளைவாகும்.
ALSO READ: ‘நக்சலைட்டுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்’ – ராணுவ வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி
சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் இயக்கப்பட்டது. இன்று, கர்நாடகாவை கோவாவுடன் இணைக்கும் வந்தே பாரத் ரயில் வந்துள்ளது. இந்த ரயில், கர்நாடகா, மங்களூரு மற்றும் முழு கடலோரப் பகுதி நெடுகிலும் உள்ள மக்களுக்கு ஒரு புதிய அரை அதிவேக ரயில் பயண அனுபவத்தை வழங்கும்.” கூறினார்.