IND vs NZ: 89 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்திய அணிக்கு குவிந்த மோசமான சாதனைகள்!
Team India Unwanted Records: நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, நான்கு விரும்பத்தகாத சாதனைகளைப் பதிவு செய்தது. SENA நாடுகளில் இந்தியாவின் மிகப்பெரிய ஒருநாள் தோல்வி, ஒரே ஆண்டில் 100 ரன்களுக்கு கீழ் இரண்டு முறை ஆல் அவுட் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் டக் அவுட் ஆகியவையே இந்த மோசமான சாதனைகள் பட்டியலில் இணைந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் (IND vs NZ) போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 333 ரன்கள் எடுத்தது. 334 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, வெறும் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், இந்திய அணி (Indian Cricket Team) நான்கு அவமானகரமான சாதனைகளைப் படைத்தது. இந்தத் தோல்வியின் மூலம், 4 மோசமான சாதனைகள் இந்திய அணியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனைகளில் ஒன்று கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ: நியூசிலாந்து அணி அபாரம்.. 4வது ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா!




மிகப்பெரிய தோல்வி:
New Zealand win the 4th ODI by 244 runs.
We go again for the 5th and final ODI on Sunday with #TeamIndia leading the series 2-1.
Scorecard ▶️ https://t.co/5IIzn3UMi2
#NZvIND https://t.co/a9HZSGxfQK
— BCCI (@BCCI) November 13, 2026
SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) சுற்றுப்பயணத்தில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய ஒருநாள் தோல்வி இதுவாகும். இதற்கு முந்தைய தோல்வி 2004-ல் சிட்னியில் ஏற்பட்டது, அப்போது இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. தற்போது, இந்தியா 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
ஒரே ஆண்டில் 100 ரன்களுக்கு கீழ்..
ஒரே ஆண்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் இரண்டிலும் இந்திய அணி 100 ரன்களுக்கும் குறைவாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருப்பது இதுவே முதல் முறையாகும். சுவாரஸ்யமாக, இந்த இரண்டு முறையும் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ்தான் இது நிகழ்ந்துள்ளது.
ஒருநாள் போட்டியில் மிக குறைந்த ஸ்கோர்:
நியூசிலாந்தில் இந்திய அணி எடுத்த மிகக் குறைந்த ஒருநாள் போட்டி ஸ்கோர் இதுவாகும். மேலும், நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா எடுத்த இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, கடந்த 2010ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கேப்டனாகி டக் அவுட்:
தனது ஒருநாள் அறிமுகப் போட்டியில் டக் அவுட் ஆன முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார். இதன்மூலம், இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகி தலா 2 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மோசமான சாதனையை ஓரங்கட்டி முதலிடத்திற்கு முன்னேறினார் ஷ்ரேயாஸ் ஐயர்.
ALSO READ: ரோஹித், கோலி இதை கற்றுக்கொள்ள வேண்டும்.. காம்பீர் பேச்சால் பரபரப்பு!
ஒருநாள் தொடரை வெல்ல வேண்டுமானால், இந்திய அணி இப்போது ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது.