AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: இந்திய அணியின் 29வது ஒருநாள் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்.. இதுவரை இருந்த கேப்டன்கள் பட்டியல்!

India's 29th ODI Captain: நியூசிலாந்துக்கு எதிரான 4 மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்துகிறார். இவர் இந்தியாவின் 29வது ஒருநாள் கேப்டன் ஆவார். முதல் மூன்று போட்டிகளில் சுப்மன் கில் கேப்டனாக இருந்தார். டெஸ்ட் தொடரைக் கருதி கில்லுக்கு ஓய்வளிக்கப்படுகிறது. அஜித் வடேகர் முதல் கேப்டன் உட்பட இந்தியாவின் அனைத்து ஒருநாள் கேப்டன்கள் பட்டியலையும் இக்கட்டுரை விளக்குகிறது.

IND vs NZ: இந்திய அணியின் 29வது ஒருநாள் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்.. இதுவரை இருந்த கேப்டன்கள் பட்டியல்!
ஷ்ரேயாஸ் ஐயர்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Nov 2026 18:17 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான (IND vs NZ) 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் அணியை வழிநடத்த இருக்கிறார். முதல் 3 போட்டிகளில் வழக்கமான கேப்டன் சுப்மன் கில் அணியை வழிநடத்தினார். டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு, கில் உட்பட சில வீரர்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார்கள். சுப்மன் கில் இல்லாத நிலையில் கேப்டனாக பொறுப்பேற்கும் ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியின் (Indian Cricket Team) 29வது ஒருநாள் கேப்டனாக ஆவார். ஐயர் ஒருநாள் போட்டியில் கேப்டனாக விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.

ALSO READ: ஒருநாள் கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி..?

ஒருநாள் போட்டியில் அஜித் வடேகர் முதன்முறையாக இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார். இந்திய அணி தனது முதல் ஒருநாள் போட்டியை 1974 ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் கேப்டன் வடேகர் 10 பவுண்டரிகள் உட்பட 67 ரன்கள் எடுத்தார். லீட்ஸ், ஹெடிங்லேயில் நடந்த இந்தப் போட்டியில், போட்டியை நடத்திய இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்கள் பட்டியல்:

  • அஜித் வடேகர்
  • வெங்கடராகவன்
  • பிஷன் சிங் பேடி
  • சுனில் கவாஸ்கர்
  • குண்டப்பா விஸ்வநாத்
  • கபில் தேவ்
  • சையத் கிர்மானி
  • எம் அமர்நாத்
  • ரவி சாஸ்திரி
  • வெங்கசர்க்கர்
  • ஸ்ரீகாந்த்
  • முகமது அசாருதீன்
  • சச்சின் டெண்டுல்கர்
  • அஜய் ஜடேஜா
  • சௌரவ் கங்குலி
  • ராகுல் டிராவிட்
  • அனில் கும்ப்ளே
  • வீரேந்தர் சேவாக்
  • எம்.எஸ். தோனி
  • சுரேஷ் ரெய்னா
  • கௌதம் காம்பீர்
  • விராட் கோலி
  • அஜிங்க்யா ரஹானே
  • ரோஹித் சர்மா
  • ஷிகர் தவான்
  • கே.எல். ராகுல்
  • ஹர்திக் பாண்ட்யா
  • சுப்மன் கில்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் 29வது கேப்டனாக இந்திய அணியை ஷ்ரேயஸ் ஐயர் அணியை வழிநடத்துவார்.

ALSO READ: உலகக் கோப்பைக்கு பிறகும் கோலி விளையாடுவாரா..? பயிற்சியாளர் கொடுத்த இன்ப செய்தி!

இந்தியா – நியூசிலாந்து 4வது ஒருநாள் போட்டி


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி, 2026 நவம்பர் 13ம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்குத் தொடங்கும். டாஸ், போட்டிக்கு அரை மணி நேரம் முன்னதாக, காலை 7 மணிக்கு நடைபெறும்.

Follow Us