பிரதமர் நரேந்திர மோடி – இஸ்ரேல் அதிபர் சந்திப்பு – கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
India Israel Talks : நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தைகள் ஜெருசலேமில் தொடங்கியுள்ளன. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாகவுள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 9 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் செய்துள்ளார். இஸ்ரேலின் மிக உயர்ந்த சிவில் விருதானது அவருக்கு வழங்கப்பட்டதால் இந்த பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தைகள் ஜெருசலேமில் தொடங்கியுள்ளன. இரு நாடுகளும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். இதனையடுத்து பிப்ரவரி 26, 2026 அன்று பிற்பகல் இரு நாட்டு தலைவர்களின் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பும் நடைபெறவுள்ளது.
இஸ்ரேல் அதிபருடன் சந்திப்பு
பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் சந்தித்தார். ஹெர்சாக்கை இதற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் சந்தித்ததாகவும், அதைப் பற்றி மகிழ்ச்சியடைந்ததாகவும் மோடி கூறினார். ஹெர்சாக்கின் சிந்தனையில் தெளிவையும், இந்தியா மீதான அவரது மரியாதையையும் அவர் கண்டதாகவும், இதனால் தான் மகிழ்ச்சி அடைவதாக மோடி தெளிவுபடுத்தினார். மேலும் பேசிய அவர், இஸ்ரேல் ஜனாதிபதியை இந்தியா வரவேற்கிறது. அவர் வரும்போது, டெல்லிக்கு மட்டும் வந்து செல்லக் கூடாது. இந்தியாவின் பிற பகுதிகளைப் பார்க்குமாறு இஸ்ரேல் ஜனாதிபதியிடம் மோடி கூறினார்.
மேலும், கல்வி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதுமை, தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து இந்தியா – இஸ்ரேல் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் ஹெர்சாக் அளித்த வலுவான ஆதரவிற்கு மோடி நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடி – இஸ்ரேல் அதிபர் பேச்சுவார்த்தை
#WATCH | Prime Minister Narendra Modi and Israeli Prime Minister Benjamin Netanyahu hold a delegation level talks in Jerusalem.
(Video: ANI/DD) pic.twitter.com/KJcVk1rtUg
— ANI (@ANI) February 26, 2026