T20 World Cup: ஜிம்பாப்வேக்கு எதிராக இமாலய வெற்றி.. இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகள் என்னென்ன?
IND vs ZIM T20 WC: ஜிம்பாப்வே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி 256/4 ரன்களைக் குவித்தது. அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினர்.
2026 டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2026) அரையிறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இந்திய அணி மீண்டும் வலுவாக இணைந்துள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது, இந்திய அணிக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. இந்நிலையில், நடப்புச் சாம்பியனான இந்தியா, நேற்று நடந்த ஜிம்பாப்வேக்கு (India vs Zimbabwe) எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி மீண்டெழுந்தது. அபிஷேக் சர்மா (55) மற்றும் ஹர்திக் பாண்டியா (50*) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. இதுவே 2026 டி20 உலகக்கோப்பையின் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். ஜிம்பாப்வே அணி கடுமையாகப் போராடிய போதிலும், இறுதியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையும் படிக்க : IND vs ZIM: தென்னாப்பிரிக்கா ஜெயிக்கணும்.. இந்திய அணிக்காக வேண்டும் ரசிகர்கள்.. அரையிறுதி போர் சொல்வது என்ன?
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு இப்போது அவர்களின் கைகளிலேயே உள்ளது. குரூப் 1-ல் இருந்து தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இதனைத்தொடர்ந்து, இந்தியா அல்லது மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளில் ஒன்று தென்னாப்பிரிக்காவுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.
குரூப் 1-ன் மீதமுள்ள போட்டிகள்:
மார்ச் 1: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே
மார்ச் 1: இந்தியா vs மேற்கிந்திய தீவுகள்
அரையிறுதி வாய்ப்புக்கான சூழல்கள்:
சூழல் 1:
ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், இந்தியா மேற்கிந்திய தீவுகளை எத்தனை ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தாலும் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
சூழல் 2:
ஒருவேளை மேற்கிந்திய தீவுகள் இந்தியாவைத் தோற்கடித்தால், அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். அதேபோல், இந்தப் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது முடிவு ஏதும் எட்டப்படாமல் போனாலோ (No-Result), சிறந்த ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இதையும் படிக்க: T20 World Cup 2026 : ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
நேற்றைய போட்டியின் சிறப்பம்சங்கள்:
ஜிம்பாப்வே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி 256/4 ரன்களைக் குவித்தது. அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினர். இது டி20 உலகக்கோப்பை வரலாற்றிலும், நடப்புத் தொடரிலும் இந்தியாவின் மிக உயர்ந்த ஸ்கோராகப் பதிவாகியுள்ளது.