Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸில் தர்பீஸ் ராஜ்யத்தை பங்கமாக கலாய்க்கும் கானா ராஜ்யம் – கலகல புரோமோ வீடியோ

Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சண்டைகளாகவே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த 6-வது வாரம் தான் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸில் தர்பீஸ் ராஜ்யத்தை பங்கமாக கலாய்க்கும் கானா ராஜ்யம் – கலகல புரோமோ வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Nov 2025 11:29 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த 6-வது வாரம் பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறியுள்ளது. அதன்படி இந்த வீட்டில் இரண்டு சாம்ராஜ்யங்களாக பிரிந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றது. ஒன்று கானா சாம்ராஜ்யம் மற்றொன்று தர்பீஸ் சாம்ராஜ்யம். இப்படி பெயர் வைக்க காரணம் கானா வினோத் மற்றும் தர்பீஸ் திவாகர் இருவரையும் மன்னர்களாக அமர வைக்கதான். அதன்படி இந்த விளையாட்டு செவ்வாய் அன்று தொடங்கிய போது கானா வினோத் கானா சாம்ராஜ்யத்தின் அரசனாகவும், தர்பீஸ் திவாகர் தர்பீஸ் ராஜ்யத்தின் மன்னராகவும் இருந்தனர். இவர்கள் இருவரும் மன்னராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் நிகழ்ச்சி குழு யோசித்தது. ஆனால் மன்னராக இருப்பதைவிட இவர்கள் வேறு பணியில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று யோசித்த பிக்பாஸ் குழு நேற்று புதன் கிழமை மன்னர்களை மாற்றியமைத்தது.

அதன்படி கானா சாம்ராஜ்யத்திற்கு விக்ரம் மன்னனாகவும் தர்பீஸ் சாம்ராஜ்யத்திற்கு பார்வதி ராணியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கானா சாம்ராஜ்யத்தில் வினோத் புலவராகவும் தர்பீஸ் சாம்ராஜ்யத்தில் திவாகர் அமைச்சராகவும் மாறினார். இதனைத் தொடர்ந்து நேற்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் தர்பீஸ் ராஜ்யம் வெற்றிப் பெற்றது. இது அனைத்தும் விட ஒவ்வொரு முறையும் தர்பீஸ் ராஜ்யத்தை கானா ராஜ்யத்தில் உள்ளவர்கள் பங்கமாக கலாய்ப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

பிக்பாஸில் தர்பீஸ் ராஜ்யத்தை பங்கமாக கலாய்க்கும் கானா ராஜ்யம்:

அதன்படி இன்று 39-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோவில் தர்பீஸ் ராஜ்யத்தில் உள்ள திவாகர் ராணியைப் புகழ்ந்து பேசுகையில் கானா ராஜ்யத்தை வம்புக்கு இழுக்த்தார்கள். கானா ராஜ்யத்தில் இருப்பவர்கள் சற்றும் யோசிக்காமல் அவர்களைப் பாடல் பாடியே கலாய்த்தனர். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இத்தனை நாட்களில் இப்போது தான் இந்த சீசனைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கருப்பு… விரைவில் வெளியாகும் ரீலீஸ் அப்டேட்!