புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிப்பு
Art Director Thotta Tharani: பான் இந்திய மொழிகளில் பல நூறு படங்களுக்கு மேலாக கலை இயக்குநராக பணியாற்றி வருகிறார் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி. இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு அறியப்பட்ட நபராக இருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு செவாலியா விருது அறிவிக்கப்பட்டதை திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
சினிமாவில் கலை இயக்குநரின் பணி என்பது ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். படப்பிடிப்பை ஒரு இடத்தில் நடத்த படக்குழு முடிவு செய்தால் அதனை அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் படத்திற்கான படப்பிடிப்பை நடத்தினால் நடிகர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு மக்கள் கூடிவிடுவார்கள். அப்படியான சூழலில் படத்தினை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்க முடியாமல் சிரமம் ஏற்படும். இந்த நிலையில் இந்த மாதிரியான சூழல்களை கையாழ்வதற்காகவே சினிமா துறையில் பணியாற்றுபவர்கள் தான் கலை இயக்குநர்கள். படங்களின் படப்பிடிப்பிற்காக ஒரு இடத்தைப் அப்படியே போலியாக உருவாக்குவதே இவர்களின் பணி. மக்கள் அதிகம் கூடி படப்பிடிப்பை எடுக்க முடியாத இடங்களை மிகவும் தத்ரூபமாக அமைத்துக் கொடுப்பதே இவர்களின் பணியாக உள்ளது.
இந்த பணிகளில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான கலை இயக்குநர் தான் தோட்டா தரணி. இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பரிச்சையமான நபராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் கடந்த 1978-ம் ஆண்டு முதல் தொடங்கிய இவரது கலை இயக்குநர் பணி தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் பல நூறு படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த கலை இயக்குநர் பணிக்காக நாட்டின் மிகவும் உயரிய விருதுகளான தேசிய விருது மற்றும் நந்தி விருது ஆகியவையும் பெற்றுள்ளார். இது மட்டும் இன்றி தமிழக அரசு விருது, கேரள அரசு விருது என பல விருதுகளுக்கு சொந்தகாரராக வலம் வருகிறார் தோட்டா தரணி.
கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிப்பு:
இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தெலுங்கு சினிமாவில் 5 படங்களுக்கு தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 75 வயதைக் கடந்தும் தற்போதும் தொடர்ந்து சினிமாவில் பங்காற்றி வரும் கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.




Also Read… முனிஷ்காந்த் நடிப்பில் வெளியானது மிடில் கிளாஸ் படத்தின் ட்ரெய்லர்
இந்த விருதுதை இந்தியாவில் இதற்கு முன்னதாக பிரபலங்கள் சத்ய ஜித்ரே, சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வருகின்ற 13-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் இந்த விருது கலை இயக்குநர் தோட்டா தரணி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அருள் நிதி – மம்தா மோகந்தாஸ் நடிப்பில் உருவாகும் மை டியர் சிஸ்டர் – அறிமுக வீடியோ இதோ