Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆண்ட்ரியா ஒரு அழகான சிலை… வர்ணித்து பேசிய விஜய் சேதுபதி!

Actor Vijay sethupathi: நடிகர்கள் கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மையா நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்க். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி ஆண்ட்ரியாவின் அழகு குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஆண்ட்ரியா ஒரு அழகான சிலை… வர்ணித்து பேசிய விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2025 14:52 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் நாயகன், வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம் என என்ன கேரக்டராகா இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் ஏஸ் மற்றும் தலைவன் தலைவி என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவர் அடுத்தடுத்து நாயகனாக நடித்த ட்ரெய்ன் மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருவது மட்டும் இன்றி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி மாஸ்க் பட விழாவில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஆண்ட்ரியாவின் அழகை வர்ணித்த விஜய் சேதுபதி:

மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று 09-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி நான் சின்ன வயசுல கடற்கரையில ஒரு சிலையைப் பார்த்தேன்.. அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன்.. ரெண்டு பேரும் இப்போ கூட ஒரே மாதிரி இருக்கீங்க. நீங்க ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வந்த விளம்பரத்துல வந்த மாதிரியே இருக்கீங்க.. எனக்குப் பிறகு, என் மகன் உங்களைப் பிரமிப்போடு பார்ப்பான்.. நீங்க படுக்கையில தூங்குறீங்களா இல்ல ஃப்ரிட்ஜரில தூங்குறீங்களா? என்று வர்ணித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு: