Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கமல்ஹாசன் – ரஜினிகாந்த்திற்காக ஒரு கதை பண்ணினேன்.. ஆனால்- மிஷ்கின் ஓபன் டாக்!

Mysskin About Historical Script: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் மிஷ்கின். இவர் படங்களை இயக்குவதை தொடர்ந்து மிக முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி படத்திற்காக கதை எழுதியது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் – ரஜினிகாந்த்திற்காக ஒரு கதை பண்ணினேன்.. ஆனால்- மிஷ்கின் ஓபன் டாக்!
ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் மிஷ்கின்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Nov 2025 20:42 PM IST

இயக்குநர் மிஷ்கின் (Mysskin) மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவரின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களை முதலில் பார்க்கும்போது பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கும். அந்த படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கும்போதுதான் அவர் இந்த படத்தில் எதை கூறியிருக்கிறார் என்றே புரிந்துகொள்ள முடியும். அந்த அளவிற்கு இவரின் படங்களில் நுணுக்கங்கள் அதிகமாக இருக்கும். மேலும் இவர் படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். இவர் தளபதி விஜயின் (Thalapathy Vijay) லியோ (Leo) திரைப்படத்தில் சிறப்பான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்பை அடுத்து இவருக்கு பல்வேறு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மேலும் இப்படத்தை அடுத்தாக இவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் ஸ்ருதி ஹாசனின் (Shruti Haasan) நடிப்பில் ட்ரெயின் என்ற படத்தை இயக்கிவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட வேளைகளில் இருந்துவருகிறது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின், ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் கமல்ஹாசன் (Kamal Haasan) கூட்டணி படத்திற்காக கதை எழுதியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி படத்திற்கு கதையெழுத்தியது குறித்து மிஷ்கின் பேச்சு :

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கு நீங்கள் எதாவது கதை எழுதியிருக்கீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மிஷ்கின், “நான் கொஞ்ச நாளுக்கு முன் ஒரு கதை யோசித்தேன். என்னுடைய உதவி இயக்குனர்கள் சார் , கமல் சார் மற்றும் ரஜினி சார் இணைந்து படம் நடிக்கவுள்ளதாக கூறியிருந்தனர். அதற்காக நான் ஒரு 3 நாட்கள் இருந்து ஒரு கதையை எழுதினேன். கதையை எழுதிவிட்டு என்னுடைய உதவியாளரிடம் சொன்னேன். அவர்களிடம் சொல்லியப் பிறகு எல்லாரும் ரொம்ப நல்ல இருக்கிறது சார் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனிடம் சென்று சொல்லமாட்டேன், அந்த கதை என்னுடைய உதவியாளர்களுக்கு மட்டும் சொல்லியதே போதும்.

இதையும் படிங்க : ‘மாஸ்க்’ படத்தில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்!

நான் என்னுடைய படங்களில் கதாநாயகனை யோசிக்காமல் படம் பண்ணுவேன், அதன் பிறகு கமல்ஹாசன் சார் இதில் நடித்தால் எப்படி இருக்கும் என ஒரு புறம் நினைப்பேன். கமல்ஹாசன் சார் நாளைக்கு என்னிடம் ஒரு கதையை கேட்கிறார் என்றால், ஒரே இரவில் ஒரு கதையை எழுதி, அவரை அதில் நடிக்கவைப்பதற்கு முயற்சி செய்ய முடியும். மேலும் நான் எழுதிய அந்த கதை ஒரு வரலாறு சார்ந்த கதையாக இருந்தது” என்று அந்தநேர்காணலில் அவர் ஓபனாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குநர் மிஷ்கின் பேசிய வீடியோ பதிவு

இயக்குநர் மிஷ்கின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஜய் என்பவர் இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.