Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Andrea Jeremiah: ‘மாஸ்க்’ படத்தில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்!

Andrea Jeremiah About Mask Movie: தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவரின் நாடியுபில் விரைவில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் மாஸ்க். இந்த படத்தில் நடிகர்களின் கதாபாத்திரத்தின் அமைவு எப்படி இருக்கும் என ஆவர் ஓபனாக பேசியுள்ளார்.

Andrea Jeremiah: ‘மாஸ்க்’ படத்தில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்!
மாஸ்க் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2025 14:37 PM IST

நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea Jeremiah) தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ் மொழியை கடந்து தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்களுக்கும் மேல் உருவாகி இன்னும் வெளியகாமல் காத்திருக்கிறது. அதில் ஒன்று, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியள்ள பிசாசு 2 (Pisaasu 2), மற்றொன்ரு வெற்றிமாறன் (Vetrimaaran) தயாரிப்பில் உருவாகியுள்ள மனுஷி (Manushi) ஆகிய படங்கள் தான். இந்த 2 படங்களும் உருவாகி சில சென்சார் பிரச்சனைகள் மற்றும் பட்ஜெட் பிரச்சனைகளின் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அந்த வகையில் ஆண்ட்ரியா ஜெரெமையா நெகடிவ் வேடத்தில் நடித்திருக்கும் படம்தான் மாஸ்க் (Mask). இதில் கவின் ராஜ் (Kavin Raj) லீட் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், ஆண்ட்ரியா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் விகர்ணன் அசோக் (Vikarnan Ashok) இயக்க, வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த படத்தில் கதாபாத்திரங்களின் அமைவு எப்படி இருக்கும் என்பது குறித்து ஆண்ட்ரியா ஜெரெமையா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில்… ராம் சரணின் ‘பெடி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

மாஸ்க் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து ஆண்ட்ரியா ஜெரெமையா பேச்சு :

அந்த ப்ரோமோஷன் நேர்காணலில் பேசிய நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, “சில திரைப்படங்களில் நல்ல மனிதர் மற்றும் கெட்ட மனிதர் என ஒரு கதாபாத்திர வித்தியாசம் இருக்கிறது. ஆனால் இந்த மாஸ்க் படத்தில் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி அனைத்து கதாபாத்திரங்களுக்கு ஒரு தவறான பக்கம் இருக்கும். இந்த படத்தை பார்த்தபிறகு நீங்கள் தான் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்கு மோசமான் பக்கம் இருக்கும் மற்றும் ஒரு மோசமான நபருக்கு ஒரு நல்ல பக்கம் இருக்கும்.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் பர்த்டே ஸ்பெஷலாக.. KH237 பட குழுவினர்கள் அறிவிப்பு!

அதுதான் இந்த திரைப்படத்தின் அழகே. மேலும் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும், இயக்குநர் என்னை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசையமைப்பும் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் விகர்ணனும் அவரின் கதையை மிகவும் திறமையாக கூறியிருக்கிறார்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

மாஸ்க் திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா ஜெரெமையா வெளியிட்ட பதிவு :

இந்த மாஸ்க் படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், 2025 நவம்பர் 21ம் தேதியில் வெளியாகவுள்ளது.  இதையொட்டி, இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025 நவம்பர் 14 அல்லது 16ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.