AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்…3 நாளுக்கான நிகழ்ச்சி நிரல்!

Tamil Nadu Interim Budget Session Agenda: தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 20- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடர் நடைபெறுவதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்…3 நாளுக்கான நிகழ்ச்சி நிரல்!
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 18 Feb 2026 06:35 AM IST

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 17) தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சபாநாயகர் மு. அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற பிப்ரவரி 20- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று புதன்கிழமை (பிப்ரவரி 18) முதல் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) வரை இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. அதன்படி, இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகின்றன. பின்னர், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் முனைவர் மூத்த கல்வியாளர் ச.சீ. ராசகோபாலன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதம்

இதைத் தொடர்ந்து, 2026- 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் தொடங்கி நடைபெற உள்ளது. அத்துடன் அன்றைய தின பட்ஜெட் கூட்டத்துடன் முடிவடைகிறது. பின்னர், நாளை வியாழக்கிழமை ( பிப்ரவரி 19) 2026- 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆகியவை மீது 2- ஆவது நாளாக பொது விவாதம் தொடங்கி நடைபெற உள்ளது. அத்துடன் அன்றைய தின கூட்டத்தொடர் நிறைவடையும்.

மேலும் படிக்க: இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறாதது ஏன்? தமிழக அரசு அளித்த விளக்கம்!

முன் பண மானிய கோரிக்கைகள்

பின்னர், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 20) 2026- 2027 ஆம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைகள் பேரவை முன் வைக்கப்படும். இந்த கோரிக்கை விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். பின்னர், 2025- 2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் ( இறுதி) பேரவைக்கு அளித்தல். 2026- 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்துக்கு பதில் உரை அளிக்கப்படும். 2025- 2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

Tamilnadu Interim Budget Session Aganda

இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரல்

மானிய கோரிக்கை மீதான சட்ட முன் வடிவு

2025- 2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல், நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது. 2026- 2027 ஆம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடைபெறும். 2026- 2027 ஆம் ஆண்டின் செலவுக்கான முன் பண மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு, அறிமுகம் செய்தல், ஆய்வு செய்தல், நிறைவேற்றுதல் நடைபெறும். அரசினர் சட்டம் முன் வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெறுவதுடன், ஏனைய அரசினர் அலுவலக நடத்தப்பட்டு அத்துடன் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: புதிய கட்சியைத் தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் – என்ன பெயர் தெரியுமா?