Kavin: மாஸ்க் படத்தில் நடிப்பதற்கான காரணம் இதுதான்- கவின் ராஜ் ஓபன் டாக்!
Kavin Raj About Mask Movie Climax: சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கவின் ராஜ். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் மாக்ஸ். இந்த படத்தில் எதற்காக நடித்தேன் என்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
நடிகர் கவின் ராஜ் (Kavin Raj) கடந்த 2019-ம் ஆண்டில் வெளியான “நட்புன்னா என்னனு தெரியுமா” (Natpuna ennanu theriyuma) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இவர் இப்படத்திற்கு முன் தனியார் தொலைக்காட்சியான விஜய் டீவியில், சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர் தொடர்ந்து சினிமாவில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 தமிழ் (Bigg Boss Season 3) நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானார். அந்த வகையில் சினிமாவில் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாகவே நடித்துவந்தார். இவரின் நடிப்பில் டாடா (Dada) மற்றும் ஸ்டார் (Star) போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இதை அடுத்தக் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கிஸ் (Kiss).
இதுவும் மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களையே பெற்றுவந்தது. அந்த வகையில் இந்த படத்தை அடுத்ததாக விரைவில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் மாஸ்க் (Mask). இயக்குநர் விகர்ணன் அசோக் (Vikarnan Ashok) இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட காரணம் குறித்து இவர் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: அஜித்துடன் கூட்டணி… லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ
மாஸ்க் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட காரணம் குறித்து கவின் சொன்ன விஷயம் :
சமீபத்தில் மாஸ்க் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக கவின் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர், “இந்த மாஸ்க் படத்தில் நான் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டததற்கு காரணம் இருக்கிறது. இப்படத்தின் கடைசி 20 நிமிட கதையானது நிச்சயமாக அனைவரையும் கவரும். இந்த க்ளைமேக்ஸ் காட்சிகள் ஆடியன்ஸ் பேசும் அளவிற்கு மிகவும் சிறப்பம்சம் கொண்ட கதையாக இருக்கும்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மாஸ்க் திரைப்படம் குறித்து கவின் ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Manasu rekka molachu parakkudhu yaathae 🙂#MaskFromNov21#KannuMuzhihttps://t.co/m4DHs2n0an
— Kavin (@Kavin_m_0431) November 2, 2025
இந்த மாஸ்க் படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதில் கவின், ஆண்ட்ரியா போன்ற பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு ஆக்ஷன், கடத்தல் மற்றும் எமோஷனல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் எல்லாமே தரமாக இருக்கும்’- கவின் கொடுத்த அப்டேட்!
இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், விரைவில் ட்ரெய்லர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.