AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈஷா யோகா மையத்தில் தொடங்கிய மகா சிவராத்திரி விழா – பிரபலங்கள் பங்கேற்பு

Isha Mahashivratri 2026 : கோயம்புத்தூர் ஈஷோ யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகாசிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களுக்கு சத்குரு மாலை அணிவித்து வரவேற்றார்.

ஈஷா யோகா மையத்தில் தொடங்கிய மகா சிவராத்திரி விழா –  பிரபலங்கள் பங்கேற்பு
சத்குருவுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Feb 2026 21:29 PM IST

கோயம்புத்தூர், பிப்ரவரி 15 : கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 15, 2026 இன்று மாலை தொடங்கியது. நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஈஷா யோகா மையத்தில் அவர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் அவர்களுக்கு பாடல்கள் பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிறப்பு பூஜையில் பங்கேற்ற பிரபலங்கள்

மேலும் இந்த ஆண்டு முதன்முறையாக ஆதியோகி சிலை முன்பு நிறுவப்பட்ட யோகேஷ்வர லிங்கத்துக்கு ஜக்கி வாசுதேவ் சிறப்பு அபிஷேகம் செய்யவுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கலந்துகொண்ட நிலையில், கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வு இரவு முழுவதும் பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த நிகழ்வில் தமன்னா, மற்றும் மௌனி ராய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க : Maha Shivaratri 2026: திருவண்ணாமலை உள்பட தமிழகத்தில் 12 கோவில்களில் இன்று மகா சிவராத்திரி பெருவிழா..

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உற்சாக வரவேற்பு

 

இரவு முழுவதும் ஈஷா மையத்தில் தியானலிங்கம் மற்றும் பைரவி வளாகங்கள் பொதுமக்கள் வருகைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் இங்கு பொது மக்கள் வருகை தந்து மக்கள் அபிஷேகம் செய்து வழிபடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதியோகி சிலை முன்பு தியானங்கள் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மகா சிவராத்திரி 2026: செய்ய வேண்டிவையும்.. தவிர்க்க வேண்டியவையும்..

இரவு முழுவதும் நடைபெறும் பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ராஜ்நாத் சிங் பிப்ரவரி 16, 2026 காலை 10.45 மணி அளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஈஷா யோகா மையத்தில் இந்தியா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் நேரடி ஒளிபரப்பு மூலம் லட்சக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்கவுள்ளனர். மேலும் இந்த ஆண்டு சிறப்பம்சமாக காது கேளாதோருக்காக சைகை மொழியிலும் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.

 

 

Follow Us