AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘போடு தோப்புக்கரணம் என்று சொன்னால்…’ இபிஎஸ் குறித்து முதல்வர் கடும் விமர்சனம்

MK Stalin Criticizes EPS: திருப்பத்தூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் திமுக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுக்கு எவ்வித டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டில் நிந்தர டிரெண்ட் பிளாக் அண்ட் ரெட் தான். வரும்தேர்தலிலும் வெல்லப்போவது நாம் தான் என்றார்.

‘போடு தோப்புக்கரணம் என்று சொன்னால்…’ இபிஎஸ் குறித்து முதல்வர் கடும் விமர்சனம்
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Feb 2026 20:09 PM IST

திருப்பத்தூர், பிப்ரவரி 14 : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக அதற்கான தீவிர செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் பயிற்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், உங்கள் நம்பிக்கையை பார்க்கும்போது அடுத்த தேர்தலில் திமுக ஆட்சி தான் என மக்கள் சொல்வது புரிகிறது. அடுத்து மதுரை, கோவை ஆகிய இடங்களில் பயிற்சி நடத்தவிருக்கிறோம். உங்களின் உற்சாகம் மேலும் அதிகரிக்கும். அதற்கு நான் கியாரண்டி என்றார்.

மேலும் பேசிய அவர், இந்த என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பயிற்சி மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள வடக்கு மண்டல பொறுப்பாளர் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு எனது பாராட்டுகள். அவருக்கு உறுதியாக இருந்த கழகத்தினருக்கு எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்துகொள்கிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகள், வேலூர் மாவட்டத்தின் 5 தொகுதிகள் சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் இருந்து இந்த மாநாட்டுக்கு வந்திருக்கும் உங்களுடயை மொத்தம் 40 தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வைக்க தயாராக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் எக்ஸ் பதிவு

 

நிரந்தர டிரெண்ட் கருப்பு, சிவப்பு தான்’

இந்தியா முழுக்கு எவ்வித டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டில் நிந்தர டிரெண்ட் பிளாக் அண்ட் ரெட் தான். 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெல்லப்போவது நாம் தான். 7வது முறையும் திமுக ஆட்சி அமைக்கும். இதனை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை. நம் அரசு செய்திருக்கும் சாதனைகள் மீது நம்பிக்கை வைத்து சொல்கிறேன். உங்களைப் போல நிர்வாகிகள் தொண்டர்கள் இருக்கும் வரை வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை என்றார்.

இபிஎஸ் மீது கடும் விமர்சனம்

பாஜகவின் கிளைக் கழக செயலாளர் போல செயல்படுகிறார் இபிஎஸ். தமிழ்நாடு மக்களுக்காக பேச முதுகெலும்பு, துணிவு இல்லாமல் பாஜகவிடம் கொத்தடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார். போடு தோப்புக்கரணம் என்று பாஜக சொன்னால் ஸ்டாப் என சொல்கிறவரை பல்டி அடிப்பார் இபிஎஸ், தமிழ்நாட்டில் பாஜக பயணிப்பதற்காக இயங்கும் கிளை அமைப்புதான் அதிமுக என்று பேசினார்.

Follow Us