AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக விருப்ப மனு வழங்க கால அவகாசம் நீட்டிப்பு..

Tamilaga vetri kalagam: கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது

தவெக விருப்ப மனு வழங்க கால அவகாசம் நீட்டிப்பு..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Feb 2026 12:38 PM IST

சென்னை, பிப்ரவரி 14: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து கட்சிகள் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது. தவெக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட கடந்த பிப்.6ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விருப்ப மனு வழங்க இன்றுடன்(பிப்.14) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வருகிற பிப்.20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பாஜகவின் புதுமையான பிரசாரம்.. வாசகமே கிடையாது.. வியந்த மக்கள்!!

கால அவகாசம் நீட்டிப்பு:

இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில்,வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

விருப்ப மனு சமர்பிக்க முடியாத நிலை:

இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

போட்டா போட்டி போட்ட தவெகவினர்:

முன்னதாக, தவெக விருப்ப மனுக்களை வாங்கும் நிகழ்வு பிப்.6ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, விருப்ப மனுக்களை வாங்கி அதிக அளவு கூட்டம் கூடியதால் பனையூரே ஸ்தம்பித்தது. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்ததோடு போலீசாரிடம் தங்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்படுவதாக புகார் அளித்தனர். மேலும், தங்களது குடியிருப்பு பகுதிகளுக்குள் தாங்களே அனுமதிக்கப்படுவதில்லை, பல்வேறு வழிகளும் தவெகவினரால் முடக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

மேலும் படிக்க: அரசு பணி வாங்கி தருவதாக வாக்குறுதி.. ரூ.8 லட்சத்தை அபகரித்த கில்லாடி பெண்கள்.. போலீசார் போட்ட காப்பு!

கட்டண தொகை விவரம்:

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருப்ப மனுக்களை வாங்க, நேரில் வர வேண்டாம் இணையதளம் மூலம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல், விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டவர்கள் மனுக்களை நிரப்பி வழங்கும்போது, கட்டண தொகையாக பொது தொகுதிக்கு ரூ.10,000, தனித்தொகுதிக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

Follow Us