AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மக்களை சந்திக்க இடம் தர மறுக்கிறார்கள்”.. சேலத்தில் விஜய் குமுறல்!!

என்னை பார்த்து வீட்டை விட்டு வெளியே வா என்று சொல்பவர்களுக்கு விஜய் சொல்லிக்கொள்ளும் பதில், என் வீடு எங்கே இருக்கு என்று தெரியுமா? முதலில் என் வீடு எது என்று தெரியுமா? என் தாய் நாடான தமிழ்நாடுதான் என் வீடு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் குடும்பம் என்று கூறினார்.

“மக்களை சந்திக்க இடம் தர மறுக்கிறார்கள்”.. சேலத்தில் விஜய் குமுறல்!!
சேலத்தில் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Feb 2026 13:49 PM IST

சேலம், பிப்ரவரி 13: “என் தாய் நாடான தமிழ்நாடுதான் என் வீடு, 8 கோடி பேர் என் சொந்தம்” என நடிகர் விஜய் கூறியுள்ளார். சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு, தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இதில் பேசிய அவர், “Courage தான் எல்லாவற்றிற்கும் ஒரு பேஸ். கரேஜ் எல்லாவற்றிற்குமே ஒரு பவர். அப்படிப்பட்ட அந்த பவர் எனக்கு எதிலிருந்து ஆரம்பிக்கிறது என்று தெரியுமா? நம்மை ஒரு ஏளனமாகப் பார்க்கும் நேரத்தில், நாம் யார் என்று ப்ஃரூப் செய்து காட்ட வேண்டும் என்று தோன்றும். நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்ற உத்வேகம் ஒன்று வரும். எந்த விஷயத்தில் நம்மை கிண்டலும் கேலியுமாகப் பேசுகிறார்களோ, அதே விஷயத்தை வைத்து நாம் ஒரு பாசிட்டிவாக மாற்றுவது என்பதில் இருந்துதான் பவர் ஸ்டார்ட் ஆகும்.

இதையும் படிக்க: “என்னால் கிடைத்த ரூ.5000”.. சந்தோஷமா வாங்கிக்கோங்க.. விஜய் பரபர அறிவிப்பு!!

தமிழ்நாடு தான் என் வீடு:

என்னை பார்த்து “ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா.. பனையூரை விட்டு வெளியே வா.. என்று சொல்பவர்களுக்கு, என் வீடு எங்கே இருக்கு என்று தெரியுமா? முதலில் என் வீடு எது என்று தெரியுமா? என்னை சீண்டி பார்ப்பதாக நினைத்து கேலியும், கிண்டலும் செய்பவர்களுக்கு சொல்கிறேன், என் தாய் நாடான தமிழ்நாடுதான் என் வீடு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் குடும்பம். என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கின்றனர். அனைவரும் என் உறவு, என் சொந்தம். 8 கோடி மக்களுக்கு உடன் இருக்க போவது நான்தான் என்று கூறினார்.

நீதி கேட்டு வந்துள்ளேன்:

உங்களிடம் ஓட்டு மட்டும் கேட்டு வரவில்லை, நீதி கேட்டும் வந்துள்ளேன். மக்களிடம் நீதி கேட்காமல், வேறு யாரிடம் சென்று நான் நீதி கேட்பேன்?. மக்களை சந்திக்க இடம் தர மறுக்கிறார்கள், மற்ற கட்சிகளுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு கூட தவெகவிற்கு கொடுக்க மாட்டார்கள். இது என்ன நியாயம்? மற்றவர்களுக்கு எல்லாம் என்பது Standard Operating Procedure. ஆனால் எனக்கு மட்டும் அது Stalin Sir Operating Procedure. இது என்ன நியாயம்? இந்த விஜய் உண்மையானவன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். நமக்கு எதிராக சூழ்ச்சி செய்வது யார், பழி போடுவது யார், யாரெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இதைச் செய்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்:

வெறுப்பு அரசியல் செய்ய அரசியலுக்கு வரவில்லை. எந்த கட்சியையும் அழிக்கவோ, ஒழிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. என்ன நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன். மக்கள் ஆதரவுடன் சூப்பரான ஒரு நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும். மக்கள் விரோத ஆட்சியை அகற்றி தவெகவை ஆட்சியில் அமர்த்துவதே மக்களின் கனவு. தவெக ஆட்சியில் உங்கள் கனவுகள் நிறைவேறும். தேர்தலின்போது வண்டியில் வந்த பணத்தை கொட்டுவார்கள். பணம் கொடுப்பதை வாங்கிக்கொண்டு கொடுப்பவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள்.

இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!

கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்ல:

தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்யதான் அரசியலுக்கு வந்தேன். பணத்தை கொள்ளையடித்ததை தவிர அவர்களுக்கு வேறெதுவும் அனுபவம் உள்ளதா? என்னைப் போல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க தில், திராணி இருக்கிறதா? இரண்டே ஆண்டுகளில் முதன்மை சக்தியாக மாறிய நமக்கு அனுபவம் இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us