AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: கொடி பறக்குதா? அரசியலுக்கு வரும் தனுஷ்? கொடியை அறிமுகம் செய்த ரசிகர்கள் – என்ன நடக்கிறது?

Dhanush Narpani Mandram New Flag: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக தொடர்ந்து நடித்துவரும் நிலையில், தனது ரசிகர்கள் நற்பணிமன்றத்தின் மூலம் மக்களுக்கு நன்மையையும் செய்துவருகிறார். அந்த விதத்தில் தனுஷின் ரசிகர்கள் புதிய கோடியை அறிமுகம் செய்துள்ளனர். இது தனுஷ் அரசியல் வருகிறாரா? என சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush: கொடி பறக்குதா? அரசியலுக்கு வரும் தனுஷ்?  கொடியை அறிமுகம் செய்த ரசிகர்கள் – என்ன நடக்கிறது?
தனுஷ் ரசிகர் மன்றம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jul 2026 17:09 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவில் கடந்து, இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நாயகனாக நடித்து அசத்திவருகிறார். தமிழில் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் நிலையில், இறுதியாக இவரின் நடிப்பில் கர (Kara) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படம் தனுஷிற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. சினிமாவில் ஒரு நடிகராக சிறப்பான படங்களை கொடுத்துவரும் தனுஷ், தனது ரசிகரக்ள் மன்றத்தின் மூலமாக பல ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிகளையும் செய்துவருகிறார். அவரின் ரசிகர்கள் மன்றத்தின் (Dhanush Fans’ Charity Organization) மூலம் பல சமூக சேவைகளையும் செய்துவருகிறார். மேலும் சமீபத்தில் தனுஷ் ரசிகர்கள் மன்ற சந்திப்பை நடத்தில், ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடியிருந்தார்.

அந்த விதத்தில் தற்போது தனுஷின் ரசிகர்கள் மன்றம் புதிய கொடி (New Flag Launch) ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். “எண்ணம் போல் வாழ்க்கை.. எண்ணம் போல் தான் வாழ்க்கை” என்ற வசனத்துடன், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் கொடியை அறிமுகம் செய்துள்ளனர். இது தொடர்பான நிகழ்ச்சியையும் இன்று நடத்தியுள்ளனர். இது தனுஷ் அரசியல் வருகிறாரா? என தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: மூன்றாவது மனைவியை கரம்பிடித்தார் பாலிவுட் ஹீரோ அமீர் கான்!

இணையத்தில் வைரலாகும் தனுஷ் ரசிகர்கள் நற்பணிமன்ற புதிய கொடி குறித்த பதிவு:

இந்த கொடியில், தனுஷின் புகைப்படமும், அதில் “எண்ணம் போல் வாழ்க்கை.. எண்ணம் போல் தான் வாழ்க்கை” என்ற வசனத்தில் இருக்கிறது. இந்த கொடியானது மேலே வெள்ளை நிறத்திலும் மற்றும் கீழே சிவப்பு நிறத்தில் உள்ளது. இதில் தனுஷின் புகைப்படத்தின் பின் ஸ்டார் சின்னம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முருகன் வடக்கே பிறந்தவரா? ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை

தனுஷின் ரசிகர்கள் நற்பணிமன்றம் அறிமுகம் செய்த புதிய கொடி :

தற்போது தனுஷின் ரசிகர்கள் மன்றம் புதிய கொடி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் பரவும் நிலையில், அந்த நற்பணிமன்றம் இனி இந்தக் கொடியின் கீழ், தமிழகம் முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு நற்பணி, சமூக சேவை, ரத்ததானம், கல்வி உதவி, நிவாரணப் பணிகள் மற்றும் பொதுநலத் திட்டங்கள் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தனுஷின் நற்பணிமன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us