Aamir Khan: மூன்றாவது மனைவியை கரம்பிடித்தார் பாலிவுட் ஹீரோ அமீர் கான்!
Aamir Khan Marries Gauri Spratt: பாலிவுட் சினிமாவில் அனைவராலும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவர்தான் ஆமிர் கான். இவரின் நடிப்பிலும், தயாரிப்பிலும் பல பாடங்கள் வெளியாகியுள்ளது. இவர் பிரபல தொழிலதிபரான கௌரி ஸ்பார்ட் என்பவரை 3வது திருமணம் செய்வதாக கூறிய நிலையில், இன்று (05/07/02026) இவர்களின் திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் ஆமிர் கான் (Aamir Khan). இவர் தற்போது 61வது வயதை கடந்தும் சினிமாவில் கதாநாயகனாக படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழில் இறுதியாக கூலி (Coolie) என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் இறுதி காட்சியில் கேமியோ வேடத்தில் அமீர் கான் நடித்து அசத்தியிருந்தார். தற்போது அவர் இந்தியில் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே இரு திருமணம் நடந்து பின் விவாகரத்தும் பெற்றிருக்கிறார். அந்த விதத்தில், பிரபல தொழிலதிபரும், ஸ்டைலிஸ்-ஆன கௌரி ஸ்பார்ட் (Gauri Spratt) என்பவரை இவர் டேட்டிங் செத்துவருவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் கூறப்பட்டுவந்தது.
அந்த விதத்தில் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமீர் கான், தானும் கௌரி ஸ்பார்ட்டும் திருமணம் செய்யவுள்ளதாக கூறியிருந்தார். அதுபோலவே இன்று 2026ம் ஆண்டு ஜூலை 5ம் தேதியில், தனது மூன்றாவது மனைவியாக கௌரி ஸ்பார்ட்டை கரம்பிடித்துள்ளார்.




இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் – அப்டேட் கொடுத்த பிரியாமணி!
கனமழைக்கு மத்தியில் நடந்த ஆமிர் கான் – கௌரி ஸ்பார்ட் திருமணம் :
தெப்போது மும்பை பகுதிகளில் பலத்த காற்றுடன் பலமான மழையும் பெய்துவருகிறதாம். இந்த நிலையிலும் ஆமிர்கான் மற்றும் கௌரி ஸ்பார்ட் திருமணம், மும்பையில் உள்ள பாலி ஹில் என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் சிம்பிளாக நடைபெற்றிருந்த நிலையில், இதில் அவர்களின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். தற்போது இவர்கள் இருவரின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இணையத்தில் வைரலாகும் அமீர் கான் மற்றும் கௌரி ஸ்பார்ட் திருமண புகைப்பட பதிவு:
Its Official! #AamirKhan and Gauri are married today in an intimate wedding in Mumbai pic.twitter.com/usnSfLHVkP
— The Climax India (@TheClimaxIndia) July 5, 2026
நடிகர் அமீர் கான் ஏற்கனவே கடந்த 1984ம் ஆண்டில் ரேனா தத் என்பவரை திருமண செய்த நிலையில், பின் 2002ம் ஆண்டில் விவாகரத்து செய்திருந்தார். பின் கிரண் ராவ் என்பவரை காதலித்து 2வது திருமணம் செய்திருந்த. இவர்களின் திருமண வாழ்க்கையும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நீடித்து, 2021ம் ஆண்டில் விவாகரத்து நடந்தது.
இதையும் படிங்க: அவரை அந்த நிலையில் என்னால் பார்க்கமுடியாது.. கே பாக்யராஜின் இறுதிச்சடங்கிற்கு வாராத காரணத்தை வெளிப்படையாக சொன்ன ஊர்வசி!
அதையடுத்து ஸ்டைலிஸ்ட் மற்றும் தொழிலதிபரான கௌரி ஸ்பார்ட் என்பவரை ஆமிர் கான் டேட்டிங் செய்துவந்த நிலையில், இன்று (05/07/2026) அவர்களின் திருமணமும் சிறப்பாக நடந்துள்ளது. ஆமிர் கானுக்கு 61 வயது என்ற நிலையில், கௌரி ஸ்பார்ட்டுக்கு 47 வயது என்பது குறிப்பிடத்தக்கது.