Aamir Khan: 61வது வயத்தில் மூன்றாவது திருமணம் செய்யும் ஆமீர் கான்… எப்போது தெரியுமா?
Aamir Khan Marries Gauri Spratt: பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ஆமிர் கான். இவர் தற்போது தயாரிப்பாளராக தொடர்ந்து படங்களை உருவாக்கிவருகிறார். இவருக்கு ஏற்கனவே இரு திருமணமாகி அவர்களை இவர் விவாகரத்து செய்த நிலையில், தற்போது மூன்றாவது திருமணம் செய்யவுள்ளதாக கூறியிருக்கிறார்.
இந்தி சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்துவருபவர் ஆமிர் கான் (Aamir Khan). இவர் தொடர்ந்து இந்தி மொழியில் படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவருகிறார். இவர்தமிழில் இறுதியாக கூலி (Coolie) என்ற திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்க, ரஜினிகாந்துடன் (Rajinikanth) இப்படத்தில் ஆமிர் கான் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு பல விமர்சனங்கள் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் இறுதியாக சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் அவரின் மகன் ஜுனைத் கானின் ஏக் தின் (EK Din) என்ற படத்தை தயாரித்திருந்தார். இவ்வாறு சினிமாவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது தனது 61வது வயதில் மூன்றாவது திருமணம் செய்யவுள்ளாராம். பெங்களூருவை சேர்ந்த கௌரி ஸ்ப்ராட் (Gauri Spratt) என்ற தொழிலதிபரை காதலித்துவந்த நிலையில், அவரை திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார். தங்களின் திருமணம் எப்போது என அவர் அறிவித்திருக்கிறார்.




இதையும் படிங்க: இதயம் முரளி படத்தின் தமிழ் நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
61வது வயதில் 47வது வயது காதலியை திருமணம் செய்யும் ஆமிர் கான் :
நடிகர் ஆமீர்கானுக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்து பின் விவாகரத்து ஆகியிருக்கிறது. அந்த வகையில் தற்போது அவர் 3வது தொழிலதிபரும், ஸ்டைலிங் ஆர்டிஸ்டுமான கௌரி ஸ்ப்ராட் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படியாக் காதலில் இருந்துவந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்களாம்.
ஆமிர்கான் – கௌரி ஸ்ப்ராட் திருமணம் எப்போது:
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆமிர்கான், வரும் ஜூலை 5ம் தேதியில் நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். எண்களின் இல்லத்தில் எளிமையாக நடைபெறும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அதில் கலந்துகொள்வார்கள். எண்களின் திருமணத்திற்கு உங்களின் ஆசிர்வாதங்களும் வேண்டும். உங்கள் ஆசியுடன் என்றும் மகிழ்ச்சியில் இருக்க விரும்புகிறேன் என அதில் அவர் கூறியுள்ளார். இதை அவர் தெரிவிக்கையில், அவரின் மகன் ஜுனைத் கானும் அருகிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் நிரந்தர கௌரவத் தலைவர் மறைந்த கே பாக்கியராஜ் நியமனம் – பார்த்திபன் வெளியிட்ட பதிவு!
திருமணம் குறித்து ஆமிர்கான் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
#AamirKhan confirms his wedding with his partner, #GauriSpratt. “I am getting married 💍 on July 5, and the wedding 💒 will take place at home with close family and friends.” pic.twitter.com/od83DXzZFv
— Movies Singapore (@MoviesSingapore) July 3, 2026
யார் இந்த கௌரி ஸ்ப்ராட் :
கௌரி ஸ்ப்ராட் என்பவர் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர். லண்டலின் பேஷன் அண்ட் ஸ்டைலிங் படிப்பை இவர் முடித்துள்ளார். தற்போது அவர் முன்பாதியில் பிரம்மாண்ட சலூன் ஒன்றை நடத்திவருகிறாராம். மேலும் ஆமிர்கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றிவருகிறார். அவருக்கு ஏற்கனவே 7 வயதில் மகன் ஒருவர் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.