ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் இதுதானா? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Title Card Update | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜன நாயகன். இந்தப் படம் வெளியாகும் போது டைட்டில் கார்ட் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் சென்சார் அப்டேட் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால் படம் குறிப்பிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதலே ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்குவதற்காக படக்குழு தணிக்கை குழு பின் அழைந்து வருகின்றது. தளபதி விஜய் நடிப்பில் உருவான இந்தப் படத்திற்கு தொடர்ந்து இப்படி பிரச்சனைகள் வந்தது அவரது ரசிகர்களிடையே மட்டும் இன்றி தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் தொடர்ந்து சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கிய இந்த ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு தணிக்கை சான்றிதழை இறுதி செய்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்த ஜூலை மாத இறுதியில் ஜன நாயகன் படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் இதுதானா?
ஜன நாயகன் படத்தில் தளபதி விஜய் என்பதற்குப் பதிலாக சிஎம் விஜய் என்ற பெயர் இடம்பெறவுள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட தணிக்கைக் குழு ஜூன் 30 அன்று இப்படத்தைப் பார்த்தது A சான்றிதழ் வழங்குவதற்காகப் பல காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ஒலியின்றிச் செய்யவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். குறிப்பாக, நடிகை பிரியமணியின் கதாபாத்திரப் பெயரை மாற்ற வேண்டியுள்ளது. விநியோகஸ்தர்கள் ஜூலை 23-ஆம் தேதியும், ஓடிடி நிறுவனங்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் (சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடும் வகையில்) படத்தை வெளியிட வேண்டும் என்று கோரி வருகின்றன. இது குறித்துத் தயாரிப்புத் தரப்பு இறுதி முடிவை எடுக்கும்.
Also Read… புலி வேட்டைக்குத் திரும்புகிறது… இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் 2 குறித்த முக்கிய அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As per Valaipechu,#JanaNayagan – #CMVijay Title card is going to be added in the film, instead of ThalapathyVijay🔥
Censor Board containing 9 Members has watched the film on June 30 and suggested many Mutes and cuts for ‘A’ Certificate. Especially #Priyamani‘s character name… pic.twitter.com/PmT82zWnj8
— AmuthaBharathi (@CinemaWithAB) July 2, 2026
Also Read… ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது சக்குரா நிக்குரா பாடல் வீடியோ