Karthi: ஜோதிகாவை எங்கள் வீட்டில் இதுவரை ஒரு நடிகையாக பார்த்ததில்லை – கார்த்தி ஓபன் டாக்!
Karthi About Jyothika: தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நாயகனாக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்ககள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் ஏசியா காரத்தில், நடிகையும், அவரின் அண்ணனின் மனைவியுமான ஜோதிகா குறித்து மனம் திறந்துள்ளார்.
கார்த்தியின்(Karthi) நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. நடிகர் கார்த்திக்கு தமிழ் சினிமாவில் எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதற்கு சமமாக தெலுங்கி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் இவர் விரைவில் தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஹிட் 3 (HIT3) படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்த நிலையில், ஹிட் 3 படத்தின் தொடர்ச்சியான ஹிட் 4 (HIT4) படத்தில் இவர்தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவுள்ளது. மேலும் கார்த்தியின் நடிப்பில் பல படங்கள் தமிழிலும் உருவாகிவரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கிறது. மேலும் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் முதல் படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar).
இப்படம் 2025 ஆண்டு டிசம்பர் மாதத்திலே வெளியாகவிருந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவும் என வட்டாரங்கள் கூறுகிறது. அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்தி, தனது அண்ணனின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா (Jyothika) குறித்து பேசியிருந்தார்.




இதையும் படிங்க: சாய் பல்லவி நடித்த அந்த படத்தை நான் ரிஜெக்ட் பண்ணேன் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஓபன் டாக்!
நடிகர் கார்த்தி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :
View this post on Instagram
ஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி :
அண்ட் நேர்காணலில் பேசிய கார்த்தி, “நான் காலேஜ் படிக்கும்போது எனது நண்பன் சொன்னது நியாபகம் இருக்கிறது, அப்போது எவர் என்னிடம் உனது அண்ணி எப்படி இருக்காங்கனு கேட்டான். நான் அவர்கள் நல்ல இருக்காங்கனு அவனிடம் சொன்னேன். மேலும் அவனும் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் என்னிடம், அண்ணி என்பவர் அம்மாவிற்கு அடுத்த ஸ்தானம் என கூறினார். எனக்கு அது ரொம்பவே பிடித்திருந்தது. நம்ம தமிழ் பண்பாட்டில் அப்படிதான், அண்ணி என்பவர் அம்மாவிற்கு அடுத்த ஸ்தானம்தான்.
இதையும் படிங்க: பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும்.. இன்னும் குறும்புக்காரர்களாகவே இருக்கிறோம் – விஷாலுடனான நட்பு குறித்து அஞ்சலி நெகிழ்ச்சி பதிவு!
அந்த வகையில் ஜோதிகா அண்ணி பயங்கரமான பொறுமையானவர். அவரை இதுவரைக்கும் என்னைக்கு, அவரை ஒரு நடிகையாக வீட்டில் பார்த்ததே இல்லை. அந்த சாயலே தெரிந்ததில்லை. ஒரு அண்ணி எப்படி இருப்பார்களோ அப்படி இருப்பாங்க, அண்ணி என்பதற்கு ஒரு உதாரணம் இருக்கும் அல்லவே, பொறுமை நல்ல தன்மை என்று அது அப்படியே ஜோதிகா அண்ணி இருப்பாங்க” என அதில் கார்த்தி வெளிப்படையாக பேசியிருந்தார்.