பொங்கலுக்கு வெளியாகிறதா கார்த்தியின் வா வாத்தியார் படம்? வைரலாகும் தகவல்
Vaa Vaathiyaar Movie Update: தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் முன்னதாகவே வெளியாக இருந்த வா வாத்தியார் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வா வாத்தியார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மெய்யழகன். கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெறும் வரவேற்பைப் பெற்றது. ஃபீல் குட் படமாக உருவாகி இருந்த இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் மூன்று படங்கள் அதாவது வா வாத்தியார், சர்தார் 2 மற்றும் மார்ஷன் என படங்கள் உருவாகி உள்ளது.
அதில் வா வாத்தியார் படம் கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் கடன் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது.




பொங்கலுக்கு வெளியாகிறதா கார்த்தியின் வா வாத்தியார் படம்?
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளியிடமுடியாமல் போனது. இதன் காரணமாக வா வாத்தியார் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இணையத்தில் வெளியான தகவலின் படி நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தின் நீளம்: 2 மணி நேரம் 9 நிமிடங்கள். அனைத்து நிதிச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 அன்று வெளியிட தீவிரமாக முயற்சிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் சொன்ன விசயம் – வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Actor @Karthi_Offl ‘s #VaaVaathiyaar censored with U/A certificate. Run Time : 2hrs 9 minutes. Trying best to release on Jan 14 for Pongal if all financial issues are sorted out. pic.twitter.com/QnBYwc2Lyo
— Sreedhar Pillai (@sri50) January 8, 2026
Also Read… விஜய் வெர்ஷனில் என்னை தாலாட்டும் சங்கீதம் பாடல்… இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ