Sreeleela: ரேஸ்-னா ரொம்ப பிடிக்கும்… நான் அவரின் மிகப்பெரிய ரசிகை- உற்சாகமாக பேசிய ஸ்ரீலீலா!
Sreeleela About Ajith Kumar: தற்போது பான் இந்திய பேமஸ் நடிகைகளில் ஒருவராக இறந்துவருபவர் ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில் தமிழ் வெளியாகும் முதல் படமாக அமைந்திருப்பது பராசக்தி. இந்த படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இவர் கலந்துகொண்டிருந்தனர். அதில் அவர் அஜித் குமார் குறித்து உற்சாகமாக பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஸ்ரீலீலா (Sreeleela). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. மேலும் இவர் மிகவும் பிரபலமான நடிகர்களான மகேஷ் பாபு (Mahesh Babu) முதல் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) வரை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், கன்னட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதில் அவருக்கு பிரபலத்தை கொடுத்த படம்தான் பெல்லி சாண்டா (Pelli SandaD). இப்படம் கடந்த 2021ல் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் கடந்த 2024ல் வெளியான “குண்டூர் காராம்” (Guntur Kaaram) என்ற படத்தில் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். அந்த வகையில் இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்துள்ளதுதான் பராசக்தி (Parasakthi).
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், அவர் அஜித் குமாரின் பெரிய ரசிகை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.




இதையும் படிங்க: ஜன நாயகன் ட்ரெய்லர் ஃபயர்… பராசக்தி ட்ரெய்லர் அற்புதம் – பாராட்டிய ரிஷப் ஷெட்டி!
அஜித் குமார் குறித்து பேசிய நடிகை ஸ்ரீலீலா :
நேர்காணலில் தொகுப்பாளர் நடிகை ஸ்ரீலீலாவிடம், “உங்களுக்கு ரேஸிங் என்றால் ரொம்பவே பிடிக்குமா?” என கேட்ட நிலையில், அதற்கு நடிகை ஸ்ரீலீலா, “ஆமாம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேலும் தொகுப்பாளர் அவரிடம், “அஜித் குமார சார் இங்க ரேஸிங் செய்வார், அவரை பிடிக்குமா” என கேள்வி கேட்ட்டார்?.
இதையும் படிங்க: 3 நாளில் ஜனநாயகன் ரிலீஸ்.. கோர்ட் படியேறிய விஜய் தரப்பு.. தொடரும் சென்சார் பிரச்னை!
அதற்கு உடனே பதிலளித்த ஸ்ரீலீலா, “ஆமாம் இதில் என்ன சந்தேகம். நானும் அஜித் குமார் சாரின் மிக பெரிய ரசிக்கத்தான். அவரின் ரேஸிங் எல்லாமே பார்ப்பேன். ரொம்பவே கூலான நபர் மற்றும் நல்ல மனிதரும் கூட, எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்” என அவர் அதில் உற்சாகமாக பேசியிருந்தார்.
அஜித் குறித்து நடிகை ஸ்ரீலீலா பேசிய வீடியோ :
Look at the excitement in #Sreeleela‘s face when Anchor asks about #Ajithkumar 😀💥
Sreeleela shares that she loves racing & is a huge fan of AK♥️AK – Sreeleela combo gonna be blast in #AK64, directed by Adhik🧨pic.twitter.com/jKqLSM6Wvd
— AmuthaBharathi (@CinemaWithAB) January 6, 2026
நடிகர் அஜித் குமார் அடுத்ததாகஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK64 படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் 2026 பிப்ரவரி இறுதியில் தொடங்கும் நிலையில், அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.