3 நாளில் ஜனநாயகன் ரிலீஸ்.. கோர்ட் படியேறிய விஜய் தரப்பு.. தொடரும் சென்சார் பிரச்னை!
Jana Nayagan Movie Censor Update: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் செய்தி என்றால் அது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் தொடர்பான செய்திகள் தான். ஆம் இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. அதற்கு காரணம் நடிகர் தளபதி விஜய் இறுதியாக நடிக்கும் படம் இது என்பதால் தான். நடிகர் விஜய் தமிழகத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ள நிலையில் இனி படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார். அது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இதன் காரணமாகவே படம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்காத காரணத்தால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது.




ஜன நாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கோரி வழக்கு:
இந்த நிலையில் ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளது. படத்தின் ப்ரீ புக்கிங் ஆங்காங்கே ஒரு சில திரையரங்குகளில் நடைப்பெற்று வருகின்றது. ஆனால் பல திரையரங்குகளில் இன்னும் டிக்கெட் புக்கிங் ஓபனாகவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு விரைவில் சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று ஜன நாயகன் படக்குழு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… பிக்பாஸில் இந்த வாரம் பணப்பெட்டி வாரம்… அட அதில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா?
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
🚨 #JanaNayagan team has filed a emergency case in Madras High Court for not receiving the censor certificate even after completing censor process pic.twitter.com/gZAXXeL5Sw
— Ayyappan (@Ayyappan_1504) January 6, 2026
Also Read… யூடியூபில் 26 மில்லியன் பார்வைகளைக் கடந்தது பராசக்தி படத்தின் ட்ரெய்லர்