Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யூடியூபில் 26 மில்லியன் பார்வைகளைக் கடந்தது பராசக்தி படத்தின் ட்ரெய்லர்

Parasakthi Movie Trailer | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு நேற்று வெளியிட்டு இருந்த நிலையில் அது யூடியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்று வருகின்றது.

யூடியூபில் 26 மில்லியன் பார்வைகளைக் கடந்தது பராசக்தி படத்தின் ட்ரெய்லர்
பராசக்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jan 2026 11:37 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கிய இந்தப் படம் இந்தி திணிப்பிற்கு எதிராக போராடும் மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளடு. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ரயில்வே துறையில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறார். அவரது தம்பி அதர்வா படிப்பிற்காக செல்லும் கல்லூரியில் இந்தி திணிப்பிற்கு எதிராக போராடும் நபராக இருக்கிறார். மேலும் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் காவல்துறை அதிகாரியாக் நடித்து இருந்தார். இவர் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதை முன்பே படக்குழு வெளிப்படையாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ட்ரெய்லரைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு தீவிரமான வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் குளப்புள்ளி லீலா, பிரகாஷ் பெலவாடி, தேவ் ராம்நாத், பிருத்வி ராஜன், குரு சோமசுந்தரம், பாசில் ஜோசப், சேத்தன், ஷாஜி சென் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த பராசக்தி படத்தினை பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

26 மில்லியன் பார்வைகளைக் கடந்தது பராசக்தி படத்தின் ட்ரெய்லர்:

இந்த நிலையில் பராசக்தி படம் வருகின்ற 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை நேற்று பராசக்தி படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த ட்ரெய்லர் தற்போது யூடியூபில் 26 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… 27 தியேட்டர்தான் கொடுத்தாங்க.. தமிழ் சினிமா சாகும்.. கொதித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… D 54 படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளை தொடங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோ!